அம்பாளின் சொரூப வர்ணணை

 அம்பாளின் ஸ்வரூபம் : 1

பெரியாவாளின் வாக்கு

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“நீ தான் பரமேசுவரன் சரீரம்” என்று 

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். 

சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது.

பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன. 

இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. 

அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் #பரமேசுவரன்# என்றால், 

அதன் இத்தனை தோற்றங்களுமே #பராசக்தி#.

ஸர்வரூபிணி/லோகமாதா/லோகஜனனி.

இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது.

பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. 

இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள் தான். 

உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன. 

உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது. 

அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால், 

அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். 

கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.

அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக, 

இவள் பாதி – அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் #அர்த்தநாரீசுவர# ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். 

சொல்லும் பொருளும் போல்,

ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ – என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். 

நான் ‘பசு’ என்று சொன்னால் 

அது ‘ப’ என்கிற ஒரு சப்தமும்

 ‘சு’ என்கிற ஒரு சத்தமும் தான்.

சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது

என்று கேட்டால் 

எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது,

 என்று கேட்டால் 

எப்படிச் சொல்வது? எப்படி இருக்கிறது,

எங்கே இருக்கிறது 

என்று தெரியவில்லை.

ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது. 

வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன.

அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? 

ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. 

அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. 

அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா? 

அவள் இருந்தால் மட்டும் போதாது,

அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.

அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் 

உணர முடியவில்லை. 

அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை.

 இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, 

அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். 

ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா?

இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, 

பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் 

பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், 

ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.

இதன் மீதி பதிவை காணலாம்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).