பாரதியின் பார்வையில் அம்பாளின் சொரூபம். அம்பாளின் சொரூபம்
அம்பாளின் சொரூபம்-5
பாரதியின் பார்வையில் அம்பாளின் சொரூபம்.
பாரதியின் அனைத்து எண்ணங்களையும் ஒன்றுபடுத்தி
எழுதியது போல் ஒரு வரிகள்.
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட
சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம
1.கணபதிராயன் -அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணமு யர்ந்திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)
2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி
சூரத் தனங்கலெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பராசக்தி
வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்
அம்பாள் உபசாகன் பாரதியின் எண்ணம் எல்லாம் அந்த பராசக்தியின் எல்லாவற்றிலும் இருக்கிறாள் என்பதால் அதன் வெளிபாடே இந்த பாடல்கள்.
அதற்கு சான்றே பாரதியின் சில பாடல் வரிகள்
அவள் எங்கும் நிறைந்து இருக்கிறாள் என்பதை தான் உணர்ந்து தான்
நிற்பதுவே,
நடப்பதுவே,
பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,
கேட்பதுவே,
கருதுவதே,
நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-
இங்கு எதை மாயை என்கிறான்
இந்த உலகத்தையா?
அதில் உள்ள ஜீவராசிகளையா?
காரணம் அவை மாயை தான் அதை நாம் உணராதவரை.
உணர்ந்தால் அசத்தானது சித்தாக மாறும்.
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?.
ஆழ்ந்த பொருள் என்பது?.
அதன் பொருள் அவளே
சித்அசத்ரூபதாரணி.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா --
நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா --
நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா.
இந்த அவன் வரிகளில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கண்ணைப் பற்றியதே
காரணம் அவன் ப்ரகலாதனுக்குகாக தூணிலிலும் துரும்பிலும் நிறைந்து நின்றான்.
அதனால் பாரதி பார்த்த அனைத்திலும் கரியமேனி கண்ணணைக் கண்டான்.
நாம சாம்யத்தில்
நாரயணண் நாரயணி
நாராயண் கருமை நிறம்
நாராயணி அவனது தங்கை காளி கரியநிறம்.
சில சமயம் அவள் விஷ்ணு துர்கையாக வெளிபடுகிறாள்.
இவை நாராயணன் நாராயணி ஒன்றே என்பதற்கு சான்று
உருவங்கள்வேறு உள்ளே இருபது ஒன்றே.
காரணம் அவன் பராசக்தி மீது வைத்த பக்தி இவை அவனிடமிருந்து வந்தற்கான சான்று.
அவளை சக்தியின் ரூபமாக பார்த்தானா.
எந்தப் பொருளானாலும் தானாக உருவாக முடியாது.
அதை உருவாக்கும் #காரணகர்த்தா# #படைப்பாளி# உண்டு.
அவர் எல்லாவற்றையும் கடந்தவர், அவரையே #கடவுள்# என மக்கள் நம்புகின்றனர்.
ஒரு படைப்பாளிக்கு #ஆற்றல்# தேவை.
அந்த ஆற்றலே #சக்தி#.
அது#செயல்படாதநிலை##சக்தியாக# (Potential energy) அல்லது செயல்படும் #இயங்குசக்தியாக# (Kinetic energy) எல்லாப் பொருளிலும் நிறைந்து காணப்படுகிறது.
அந்த ஆற்றலைத் தெய்வமாக மதிக்கிறார் பாரதி.
இந்த உலகு அனைத்தையும் தோற்றுவிப்பவள் அன்னை அல்லவா?
ஆகவே, உலகிலுள்ள தெய்வம் உட்பட அனைத்துப் பொருள்களும் காளியிடமிருந்து பிறப்பதாக எண்ணுகிறார்.
எல்லாம் அவளுடைய அம்சம் தானே! குழந்தை தனக்கு வேண்டியதை யாரிடம் கேட்கும்?
அன்னையிடம்.
எனவே, தம் பாவங்கள் போகத்
தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய விரும்பித்
தம் உடல் உறுப்புகள் அனைத்தையும் சக்திக்கு அர்ப்பணம் செய்கிறார்.
அவளைச் சரணடைந்தால் கவலை தீரும், துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.
சக்தியை வழிபடுங்கள்.
சொல், செயல், எண்ணம் இவை மூன்றும் சக்தியைப் பற்றியே இருக்க வேண்டும் என்று சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்னும் பாடலில் சக்தி தனக்கே உரிமையாக்கு என்று பாடுவதைக் காணலாம்.
இதை தான் பரமசார்யாள் தனது தெய்வத்தின் குரல் அம்பாள் சொரூபத்தில் விளக்குகிறார்.
ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,
கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்.
(மகாசக்தி பஞ்சகம்)
(கரணம் - மனம், தனு - உடல்)
என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.
தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம்.
ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்
அல்லது நீங்கும் . . . . . .
(ஓம் சக்தி - 2)
(அல்லது - துன்பம்)
என்று குறிப்பிடுகிறார்.

Comments
Post a Comment