காஞ்சி மஹாபெரியவாவின் #ஸ்ரீலலிதாஸ்பதநாமாவளி#.

 காஞ்சி மஹாபெரியவாவின் #ஸ்ரீலலிதாஸ்பதநாமாவளி#.



ஒருமுறை காஞ்சி மகா பெரியவாவை சந்தித்த பக்தர்கள் ஒருவர் அன்னை பராசக்தியின் அருளை பெறுவதற்கு எந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்?.


எந்த மந்திரத்தை சொன்னால் அன்னையின் ஆயிரம் நாமங்கள் கொண்ட லலிதா சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்கும்?


லலிதாசகஸ்ரநாமம் தெரியாதவர்கள் என்ன மந்திரத்தை சொல்லி அம்பிகையை வழிபட்டால் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என கேட்டார்.


அந்த பக்தருக்காக, தன்னுடைய உள்ளுணர்வால் அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் இருந்து 7 நாமங்களை தேர்வு செய்து கூறினார் காஞ்சி மஹாபெரியவா. 


இதற்கு ஸ்ரீ லலிதா ஸ்பத நாமாவளி என்று பெயர்.


இந்த 7 நாமங்களை சொன்னால் ஆயிரம் திருநாமங்களால் அன்னை பராசக்தியை போற்றி வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும்.


1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ


ஓம் ஸ்ரீ மாத்ரே நம: 


என்னும் 


முதல் நாமாவளியே உயர்ந்தது தான். 


மாதா என்றால் அன்னை. 


தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். 


தெய்வீக பெண் ஆற்றலால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பிரபஞ்சத்தின் படைப்பு சக்தியைத் தட்டுகிறது.


ஓம் ஸ்ரீ மாத்ரே  நம  எல்லா துக்கங்களையும் நீக்கி, மகிழ்ச்சியை மட்டுமே தருகிற அளவற்ற செல்வத்தைத் தருபவளே. அன்னை.-


அவளுடைய படைப்பின் பங்கையும் குறிக்கிறது.


2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ


அன்னதாயை நம  உணவு கொடுப்பவள். அவளே அன்னபூரணி,எப்பெருமான் சிவனுக்கே அன்னத்தை வழங்கியவள்.


3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ


ஓம் வசுதாயை நம  


செல்வத்தை அளிப்பவள். 


அவளே அலைமகளின் சொரூபம் அவளே இராஜராஜேஸ்வரி.


நித்ய பரிபலனத்திற்கான செல்வத்தைக் கொடுப்பவள்.


4.ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ


ஓம்   சச்சமர ராமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதாயை நம  


செல்வத்தின் தெய்வமான லட்சுமியாலும், அறிவின் தெய்வமான சரஸ்வதியாலும் ஆரவாரிக்கப் படுகிறாள்.


அவளே #காமாக்ஷி# அவளின் ஒரு கண் கள் லெக்ஷ்மி மற்றொரு கண் சரஸ்வதி.


‘க’ என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.


அந்த ‘க’வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது.


க என்பது சமஸ்கிருத்தில் ஆண்பால்


அதன் நெடில் #கா# பெண்பால் சரஸ்வதி.


‘கா’  காமாட்சி என்றால் கருணை வடிவானவள்.


அன்பே வடிவானவள் என்று பொருள்.


தன்னை வணங்கும் அடியவர்களை தன் அன்பால் அரவணைப்பவள் காமாட்சி.


'காம' என்றால்


 'ஆசை' (விருப்பம்), 'அட்க்ஷி' (ஆட்சி) என்றால் 'கண்' என்றும் 'ரட்சித்தல்' என்றும் 'ஆட்சி செய்தல்' என்றும் பொருள்.


குழந்தைகளாகிய நம்மீது அன்பைப் பொழியும் கண்களை உடைய தாய்தான் 'காமாட்சி' அருள்மிகு காமாட்சியின் கண்களுக்கு உள்ள விசேஷ சக்தி மிகவும் அலாதியானது. அளவிட முடியாதது.


'கா'வையும் 'மா'வையும் அட்சங்களாக (கண்களாக) கொண்டவள் எவளோ அவளே காமாட்சி எனப்படுகிறாள்.


'க' என்பது பிரம்மாவைக் குறிப்பதாகும்.


அந்த 'க'வின் பத்தினியான சரஸ்வதியைக் குறிப்பது. 'கா' அவ்வாறே,


'மா' என்பது லட்சுமியைக் குறிப்பதாகும். 


'மா' தவன் என்றால் லட்சுமியின் பதி என்பதாகும்.


இதன்படி பார்த்தால் 'கா' வான சரஸ்வதியையும், 'மா' வான லட்சுமியையும் தன் இரு கண்களாகக் கொண்ட 


காமாக்ஷி காருண்யத்தையும், கல்வியையும், செல்வத்தையும்

வாரி வாரி மாரியாய் வழங்குபவள்.


அதனால்  அவள் ஓம்   சச்சமர ராமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதாயை நம  


5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ.


ஓம் கடாக்ஷ கிம்காரி பூத கமலா கோடி சேவிதாயை நம- 


அவளது எளிய பார்வைக்காக ஏங்கும் கோடிக்கணக்கான லட்சுமிகளால் ஆராதிக்கபடுபவள்.


6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ.


ஸ்ரீ சிவ ஷக்தைக்ய ரூபிணியை நம -


 சிவனையும் சக்தியையும் ஒன்றிணைப்பவள்


7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ.


ஸ்ரீ லலிதாம்பிகாயை நம  


எளிதாக அணுகக்கூடிய அன்னை.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).