நீ எதை நினைக்கிறாயோநீ அதுவாகிறாய்.

 நீ எதை நினைக்கிறாயோநீ அதுவாகிறாய்.


இன்றைய முதல் பதிவு அம்பாள் எப்படிபட்டவள் என்ற பதிவு.


இரண்டு நாட்களுக்கு முன் எனது நண்பர் என்னிடம்  தயங்கி தயங்கி கேட்டது.


எனக்கு எதாவது ஆதவற்ற இல்லம் இருந்தால் சொல்லுங்கள் என்று.


காலை குருஜிமிருடமிருந்து அழைப்பு இன்று ஶ்ரீ பூர்ண மஹாமேரு trustல் பஜனை இருக்கிறது அவசியம் வாருங்கள் என்று.


பெயரை கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு காரணம் வார வாரம் வெள்ளியன்று வணங்குவது அம்பாள் அர்தத மஹாமேரு லலிதாம்பா தரிசனம்.


உடனை கிளம்பி ஆகிவிட்டது, உள்ளே நுழையும்போது ஒரு ஆனந்தம்.


நுழைவாயிலில் ஶ்ரீநகரம் என்ற பெயர்ப்பலகை.


உள்ளே நுழைந்தவுடன் ஒரு விதமான அமைதி.


அது அம்பாளை #ஶ்ரீநகரநாயிகா# என்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.


அதற்கேற்றற்போல வாசலில் ஶ்ரீநகர பெயர்பலகை


பஜனை செய்யும் இடத்தில் உள்ளே நுழைந்தால் அம்பாள் ஶ்ரீசக்கரத்தில் ஶ்ரீமத்மஹாராணியாக கொலு வீற்றுருக்கிறாள்.


அவளது காலடியில் ஶ்ரீ பாலாதிரிபுர சுந்தரி.


அம்பாளின் பின்புறம் அழகிய சடையுடன் கூடிய நீண்ட பின்னலிட்ட கூந்தல்.


பின்பறம் மஹாதிரிபுரசுந்தரி #பஞ்சப்ரதேசசீனா# என்ற லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஏற்ப அமர்ந்து இருக்கும் ஒவியம்.


அங்கே தான் ஒன்றரை மணி நேரம் பஜனை.


ஒன்றரை மணிநேர வேறு உலகத்திற்கு சென்ற ஒரு வியப்பு.


பஜனை முடிந்த பிறகு கற்பூர ஆரத்தி .


இதன் பிறகு மனத்திற்குள் சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்.


கிட்டத்தட்ட 15வருடத்திற்கு முன் என்னுடன் வேலை பார்த்த திரு.பாலாஜி அவர்களை சந்தித்து.


என்னுடைய கேள்வி அம்பாள் எப்பேர்ப்பட்டவள்?.


நான் எப்பேர்ப்பட்டவள் என்ற வினாவிற்கு சொல்லாமல் அம்பாளின் பதில்.


காருண்யத்தின் லாவண்யமே எனது சரீரம் என்பது போல் பதில் வந்தது.


ஒன்று  எனது மனது நிறைந்தது மற்றொன்று வயிறு நிறைந்தது.


நான் அன்புமிக்கவள் மற்றும் கருணைமிக்கவள் என்பது போல் அவளது மௌனம் பதிலாக இருந்தது.


மற்றொன்று எனது நண்பரின் கேள்விற்கு அவருக்கு ஏற்றார் போல் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் .


அதற்கான விபரங்களை எனது நண்பரின் பாலாஜியின் மூலம் விபரம் அறிந்து அவருக்கு தெரிவிக்க முடிந்தது.


நீ எதை நினைக்கிறாயோ 


நீ அதுவாகிறாய்.


சதாசர்வ காலம் அவளது நினைவு அதற்கான பதில் இன்றைய ஶ்ரீ பூர்ண மஹாமேரு trust அனுபவம் எனக்கு ஏற்படுத்தியது.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).