எதிரிகள் அடிபணிய Subduling enemies.காமன் படைகம்கலன்கள்
பகுதி 83.
இந்த பதிவின் நோக்கம் லலிதா சஹஸ்ர நாமம் என்பது மூலம் அதன் சமஸ்கிருதம் ஆச்சாரியிரின் சௌந்தயலஹரி க்ரந்தம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு தான் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி.
அதனால் தான் இதை மூன்றையும் தொடர்ப்புபடுத்தி இந்த பதிவுகள்.
இவற்றில் வாக்தேவதைகளின் சிந்தனையும் ஆச்சாரியர் மற்றும் பட்டரின் சிந்தனையும் ஒன்றே அது அம்பாளிலைப் பற்றியதே என்பதற்காக இந்த பதிவுகள்.
லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#
#இந்த்ரகோபபரிக்ஷிப்தஸாமரதூணாபஜங்கிகா#.
அன்னையின் கனுகால்கள் மன்மதனின் அம்பறாதூணிகளாக சொல்லி இருக்கிறார்கள்.
#சௌந்தயலஹரி#.
எதிரிகள் அடிபணிய
Subduling enemies.
காமன் படைகம்கலன்கள்
(சதுரங்க சனிய ஸ்தம்பனம்)
"பரஜேய்தும் ருத்ரம் த்விகுணஷரகர்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜாங்கே தே விஷமவிஷிகோ பாதமக்ருதா!
யதாக்ரே த்ருஷ்யந்தே தஷாஷரபலாஹா பாதயுகலீ
நகாத்க்ரச்சாத்மானாஹ ஸுரமகுதாஷாநைகாநிஷ்காநிஷ்டாஷாநைகநிஷ்காநிஷ்காநிஷ்காநிஶ்சரகர்பௌ கிரிஸுதே.
அம்மா!
உன்னுடையக கணுகாகால்களினது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பற்த்துணிகள் மாதிரி இருக்கின்றன.
அம்பறாத்துணிகளின் மும்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவதுஸபோல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் யன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது.
அந்த பத்து நகங்கள் உன்காலில் விழுங்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.
மன்மதன் தன்னுடைய பஞாசபாணங்களை பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து,
அவரை ஜெயிக்கதக்க பாணங்களையும் அந்த பாணங்களை வைக்கும் அம்பறாதுணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும் அவ்வாறான பாணங்களும் அம்பராதூணியும் அன்னையின் கால்களும் அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறுகிறார்.
ஶ்ரீலலிதா சக்ஷஸ்ர நாமத்திலும்
#இந்த்ரகோபபரிக்ஷிப்தஸாமரதூணாபஜங்கிகா#
எனும் நாமம் அன்னையின் கனுகால்களை மன்மதனின் அம்பறாதூணிகளாக சொல்லி இருக்கிறார்கள்.
இவ்வாறான அம்பிகையின் கனுகால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகை விவரிக்கிறார் ஆச்சாரியர் பகவத்பாதாள்.
#அபிராமிஅந்தாதி#.
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
பதினான்கு உலகினையும் முறையாகப்
படைத்தும்,
காத்தும்,
அழித்தும் தொழில் புரியும்
தேவாதி தேவர்கள் முறையே
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள்.
இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும்.
இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே!
மணம் வீசுகின்ற நின் இணையடிகளில்,
எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச்
(அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது,
எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
#சகலமும்ஜகன்மாதாஅபிராமியேகடைகண்களே#.

Comments
Post a Comment