சத்ரு ஜெயம் Subduling enemies

 பகுதி 86


சத்ரு ஜெயம்


Subduling enemies


 


லலிதா சஹஸ்ர நாமமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.


#லலிதாசஹஸ்ரநாமம்#


ஸிஞ்ஜாநமணி மஞ்ஜீரமண்டிதா ஶ்ரீபாதாம்புஜா 


அழகிய ஒளிரும்  இரத்தினங்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களை உடையவள்.


#சௌந்தயலஹரி#


"ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலனமத வைலக்ஷ்யணமிதம்

லலாதே பர்தாராம் சரணகமலே தாதயதி அவர்கள்!


சிராதந்தஹஷல்யம் தஹனாக்ருதமுன்மூலிதவதா

துலாகோடிக்வானைஹி கிளிகிலிதமீஷாநரிபுணா.


அம்பிகே 


விளையாட்டாக உனது பிறந்த வீடடினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார்.


உன்னுடைய கோபத்தைக் கண்டு,என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கி விடுகிறார்.


அவ்வாறு வணங்கும்போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு,  உன்பாத சிலம்புகள் கிலிகிலி என்று ஓலியெழுப்புகின்றன.


உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மனமதன் முன்பு ஒரு முறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.


அம்பாளிடம் சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த வீட்டினை இகழ்ந்த பரமன்.


 அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும்,


அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள் காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார்.


மஹாபதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருகார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச்  சொல்லப்படிக்கிறது என்கிறார்.


முன்பு ஒரு முறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாக கூறுகிறார்.


தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில் பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.


இதற்கு வேறுவிதமாக ஒரு வியாக்யாணம்.


“சிவன் வேண்டுமென்றே பராசக்தியை வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்தான்.


கோபத்தில், பராசக்தி சிவனின் மூன்றாவது கண்ணை உதைத்தாள்,


சிவன் வெட்கத்தால் தலையைத் தொங்கவிட்டார். 


இந்தக் காட்சியைப் பார்த்த மன்மதன் தனது கணுக்கால்களில் உள்ள 

சிறுமணிகளில் இருந்து ஒலிப்பது போன்ற மகிழ்ச்சியான ஒலிகளை (சிரிப்பு) எழுப்பினார்.


இந்த வசனத்தை முந்தைய வசனத்துடன் சேர்த்து படிக்க வேண்டும்.


முந்தைய வசனத்தில், அவள் தோட்டத்தில் அசோக மரத்தை உதைப்பதைக் கண்டு, 


சிவன் அசோக மரத்தின் மீது பொறாமை கொண்டதாகவும், அவளது தாமரை பாதங்களிலிருந்து ஒரு உதை பெற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. 


இது இவ்வசனத்தில் விளக்கப் படுகிறது. 


பராசக்தி சிவன் மீது மிகவும் விருப்பமானவள் என்கிறார் 


லலிதா சஹஸ்ரநாமம் 409, 


#சிவப்ரியா#


உண்மையில், அவள் சிவனிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவள் அல்ல. 


அவள் ஒரு தனியனவள் அல்ல, அவள் எப்போதும் சிவனுடன் ஒன்றாகவே இருக்கிறாள். 


ஒரு வினாடியின் ஒரு பகுதிக்கு அவை பிரிக்கப்பட்டால், பிரபஞ்சத்தின் அழிவு தூண்டப்படும். 


அதனால்தான்,


 லலிதா சஹஸ்ரநாமம் 999


#சிவசக்தியைக்யரூபிணி# கூறியது,


அவள் சிவனிலிருந்து வேறுபட்டவள் அல்ல என்று திட்டவட்டமாக கூறுகிறது.


இதே கருத்து சௌந்தர்ய லஹரியில் (வசனம் 34)


 “ஓ! பராசக்தி! 


நீங்கள் சிவனின் உடலாகத் தோன்றுகிறீர்கள். நான் உன்னை பாவமற்ற (தூய்மையான) சிவனாகக் கருதுகிறேன். 


ஒன்பது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை குணாதிசயங்கள் உங்கள் இருவருக்கும் பொதுவானவை, மேலும் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கும் நிலையில் இருக்கிறீர்கள், இதன் விளைவாக பேரின்ப நிலை ஏற்படும்."


#அபிராமிஅந்தாதி#.


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு


கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே


மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்


பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே.


தை - தையலே; பெண்களில் சிறந்தவளே.


வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு - நின் முன்னர் வந்து உன்னுடைய திருவடித் தாமரைகளைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு


கை வந்த தீயும் - கையிலிருந்த தீயும்


தலை வந்த ஆறும் - திருமுடி மேல் இருந்த கங்கையும்


கரந்ததெங்கே - மறைந்ததெங்கே?


மெய் வந்த நெஞ்சின் அல்லால் - உண்மை தங்கும் நெஞ்சில் அன்றி


ஒரு காலும் - ஒரு போதும்


விரகர் தங்கள் - வஞ்சகர்களில்


பொய் வந்த நெஞ்சில் - பொய் தங்கும் நெஞ்சில்


புகல் அறியா மடப்பூங்குயிலே - புகுந்து தங்காத பூங்குயில் போன்றவளே


***


இதற்கு பதில் பின்வருமாறு.


திருக்கல்யாணத்தின் போது சிவபெருமானின் திருக்கையில் இருந்த தீயும் திருமுடியிலிருந்த கங்கையும் தானாக மறைந்தது என்று இந்தப் பாடலுக்கு ஒரு பொருள் சொல்லப்படுகின்றது.


அன்னையுடன் கூடிய ஊடலைத் தணிப்பதற்காக ஐயன் தாள் பணியும் போது கைகளில் நெருப்பிருந்தால் அன்னையின் திருவடிகளுக்கு வெம்மை தந்து ஊடலைக் கூட்டும் என்பதாலும் தலையில் கங்கையிருந்தால் மாற்றாளைக் கண்டு அன்னையின் ஊடல் மிகும் என்பதாலும் அவை தானாக மறைந்தன என்றொரு பொருளும் சொல்லப்படுகின்றது.


அன்னை ஊடல் கொண்டிருக் கிறாளாம். 


அந்த ஊடலைத் தணிக்க அந்த மகேசன் வருகிறான். அன்னையின் திருப்பாதங்களை வருடுகிறான். ஊடல் தணிகிறது. 


அம்மையும் அப்பனும் இணந்து காட்சி தருகிறார்கள்.


ஆனால், அம்மையின் குழந்தையான அபிராமி பட்டருக்கோ சில சந்தேகங்கள் எழுகின்றன. வேடிக்கையான சந்தேகங்கள்!


அந்த சங்கரனார்க்கோ, கையிலே நெருப்பு இருக்கிறது. 


அந்த நெருப்புடனே அவன் தண்டவம் ஆடுகின்றான். அப்படிப்பட்ட ஒருவன், கையிலே நெருப்புடன் எவ்வாறு அபிராமித் தாயின் பாதங்களை வருடிக்கொடுக்க முடியும்? 


அந்தத் தீயை எங்கேனும் வைத்து விட்டுத்தானே வர வேண்டும்! 


எங்கு வைத்திருப்பார்? 


அபிராமித் தாயிடமே அந்த சந்தேகத்தைக் கேட்டுவிடுகிறார் பட்டர்.


இன்னொரு சந்தேகமும் எழுகிறது. அன்னையின் ஊடலைத் தணிக்க வரும்போது, 


சங்கரனார், நிச்சயமாக, அன்னையின் அடி பணிந்திருப்பார். அன்னையின் பொய்க்கோபம் தணியும் விதமாக புழுரைகளும் கூறியிருப்பார். 


அப்படி, அவர் வந்து அன்னையின் பாதம் பணியும் போது நிச்சயமாக சங்கரனாரின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை அன்னையின் கண்ணிலே பட்டுவிடுவாள் இல்லையா? ஊடலைத் தணிக்கப் போன இடத்திலே, 


தனது மணாளன் இன்னொரு த்தியைத் தலையிலே தூக்கிவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், 


ஊடல் தணியவா செய்யும்? இன்னும் கொழுந்து விட்டு அல்லவா கோபம் பொங்கும்! ஆக, 


அவர், தனது தலையிலே, கங்கையுடன், அபிராமித் தாயின் ஊடலைத் தணித்து இருக்க முடியாது. கங்கையை, எங்கோ மறைவாக வைத்துவிட்டுத்தான் ஊடல் தணிக்கும் முயற்சியிலேயே அவர் முனைந்திருக்க வேண்டும்!


குழந்தைக்கு இப்போது சந்தேகம் வருகிறது! 


அந்த கங்கையை எங்கே மறைத்து வைத்திருப்பார்?


சந்தேகங்களை, அபிராமித் தாயிடமே கேட்கிறார் பட்டர்.


அம்மா! அபிராமி! 


மெய் பேசும் நெஞ்சில் அல்லாது பொய் இருக்கும் இடத்தில் நில்லாத


தாயே! 


பூங்குயிலே! 


உன்னை சமாதானம் செய்ய வந்த சங்கரனார், தனது கையிலே வைத்திருக்கும் தீயையும், தலையிலே வைத்து இருக்கும் கங்கையையும், எங்குதான் வைத்துவிட்டு வந்திருப்பார்?


கொஞ்சம் சொல்லம்மா! என்கிறார் பட்டர்.


இங்கு ஆச்சாரியர் பகவத்பாதாள் மற்றும் பட்டரின் சிந்தனைகள் ஒன்றாகவே இருந்துள்ளது என்பதையே இந்த பதிவு காட்டுகிறது.


#ஓம்அபிராமிதாயேநமஹ#

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).