எனக்கு முக்கியம் அம்பாள்” :2
எனக்கு முக்கியம் அம்பாள்” :
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2.
அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது.
அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்.
‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது.
என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
என்னிடம் தோஷம் இருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான்.
எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய்விட்டால்,
அப்புறம் உபதேசம் என்ற வாய்ப்பேச்சே தேவையில்லை.
பேசாமலே அநுக்கிரஹ சக்தியானது மற்றவர்களுக்கு ஞானத்தைத் தந்துவிடும்.
ஆக, இரண்டு நிலையிலும் உபந்நியாசம் கூடாதுதான்.
இப்படி எல்லாம் நான் உபதேசம் பண்ணுகிற நேரத்தை அவளுடைய தியானத்திலேயே செலவு செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்.
உபந்நியாசம் செய்கிற பொழுதை அவள் தியானத்தில் செலவிட்டால்,
என் தோஷங்கள் எத்தனையோ நீங்கும். இதைக் கேட்கிற பொழுதை அவளுடைய தியானத்தில் செலவிட்டால் உங்கள் தோஷங்களும் எவ்வளவோ விலகும்.
ஆனாலும் இப்படியெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பதற்குக் காரணம்,
உங்களில் யாராவது தம்மைத்தாமே இவ்வாறெல்லாம் சோதித்துப் பார்த்துக்கொண்டு,

Comments
Post a Comment