#அபிராமிஅந்தாதிபாடல்-21#

 #அபிராமிஅந்தாதிபாடல்-21#


அம்பிகையை வழிபடாது, நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும்.

மங்கலை, 

செங்கலசம் முலையாள், 

மலையாள், 

வருண சங்கலை செங்கை,

சகலகலா மயில், 

தாவு கங்கை

பொங்கலை தங்கும் 

புரிசடையோன் புடையாள், 

உடையாள்,

பிங்கலை, 

நீலி, 

செய்யாள், 

வெளியாள், 

பசும் பெண்கொடியே

மங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள்.

செங்கலசம் முலையாள் -

செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள்.

மலையாள் - 

மலையரசன் ஈன்ற பெண். 

பர்வதராஜ புத்ரி ஹைமவதி

வருண சங்கலை செங்கை -

சங்குகளால் ஆன வளையல்களை தன்சென்னிறகைகளில்அணிந்தவள்.

சகல கலா மயில் - 

அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி)

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - 

துள்ள திரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் ,

தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள்

உடையாள் - 

என்றும் பக்தர்களுக்கு உடையவள்

பிங்கலை - 

மஞ்சள் வண்ணத்தினாள்.

நீலி - 

நீல நிறமுடையாள் 

செய்யாள் - 

சிவந்த நிறமுடையாள்

வெளியாள் - 

இவ்வாறெல்லாம் விளங்குபவள்.

பசும் பெண்கொடியே - 

பசுமையான கொடி போன்றவள் - 

இதனால் தான் அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். 

பர்ணா - இலை. 

அபர்ணா - இலையில்லாதது. 

அது ஒரு கொடி

சிவன் கட்டமரம் - அசைவற்றவர்.

அம்பாள் - சக்தி - அவரை கொடி போல் சுற்றிக்கொண்டிருப்பவள்.

காய்ந்த கொடி இல்லை. 

அவள் பசுங்கொடி. 

இவர்கள் இருவரின் புதல்வர் -

முருகன் - விசாகன். 

சாகை - கிளை. 

விசாகை - கிளை அற்றது. 

தற்போது வைகாச விசாகம் நடைபெறும் காலம்.


கிளை இல்லாத செடி. 


இதுவே சோமாஸ்கந்த வடிவம்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).