அபிராமிஅந்தாதிபாடல்-22#
#அபிராமிஅந்தாதிபாடல்-22#
பிறவாமை அளிக்கும்
கொடியே,
இளவஞ்சி கொம்பே,
எனக்கு வம்பே பழுத்த
படியே,
மறையின் பரிமளமே,
பனி மால்
இமயப்பிடியே,
பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே,
அடியேன்
இறந்து
இங்கு
இனி பிறவாமல்
வந்து ஆண்டுகொள்ளேன்
கொடி போன்றவளே,
முந்தைய பாடலில் அப்பனை சுற்றிய கொடி அம்பாள்
இளங்கன்று போல் பசுமையான கொம்பே,
இளமையான கொடி
தகுதியற்ற எனக்கு தானாகவே முன்வந்து அருள்புரிபவளே,
தகுதி என்பதை அம்பாள் முடிவுச்செய்கிறாள்
வேதத்தின் ஆதாரமே,
அவளே வேதமாதா
பனி மூடிய இமயத்தில் பிறந்த பெண் யானை போன்ற வீரம் நிறைந்தவளே,
அவள் ஹிமகிரி சுதே ஹேமலதே
ஹிமவான் மகள்
பிரம்மா முதலிய தேவர்களை பெற்றவளே,
அவளே ஆதிபராசக்தி அவளிடமிருந்து தோன்றியவர்கள் பிரம்மாகள்.
நான் இப்பிறவியில்
இறந்த பின் மீண்டும் பிறவாமல் என்னை ஆட்கொள்வாயாக.
அம்பாளின் பாதத்தில் சரண் அடைந்தாள் மறுபிறவி இல்லை.
சரணாகதி தத்துவம்.

Comments
Post a Comment