எனக்கு முக்கியம் அம்பாள்” : 3

 எனக்கு முக்கியம் அம்பாள்” :



தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-3.


அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய இந்தப் பேச்சு தூண்டாதா என்ற ஆசைதான்.


பிரச்சாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளராது.


பிரச்சாரமும் பிரசங்கமும் தற்கால சாந்திதான்.


சாந்தியே இல்லாத லோக வாழ்க்கையில் ஏதோ தாற்காலிகமாக ஒரு சாந்தி உண்டானாலும் ஒரளவுக்கு விசேஷம்தான். 


நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன்.


நான் பேசாவிட்டால் உங்களுக்கு துக்கமாகவும், ஏமாற்றமாகவும் இருக்குமே என்பதற்காகப் பேசுகிறேன்.


ஆனால் இதைவிட அவசியம் தாற்காலிகமானதைச் சாசுவதமாகப்பண்ணிக் கொள்வதுதான். 


அதற்கு ஒரே வழி அம்பாளின் சரணாரவிந்தத் தியானமே. 


எனக்கு முக்கியம் அம்பாள். 


லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாரவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.


நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும்.


மற்ற மதங்களாலோ, நாஸ்திகத்தாலோ நம் மதத்துக்கு ஹானி வராது.


 நம்முடைய அநுஷ்டானக் குறைவினாலேயேதான் ஹானி வரும். 


நம் உடம்பில் சக்தி குறைந்தால்தான் நோய் வருகிறது. அதுபோல் நம் அநுஷ்டானம் குறைந்தால் மதமாற்றம், நாஸ்திகம் முதலிய நோய்கள் வந்து விடுகின்றன.


அநுஷ்டானங்களை விடாமல் செய்துகொண்டு அம்பாளுடைய சரணாரவிந்தங்களைத் தியானம் செய்து கொண்டிருந்தால் போதும்,


ஒருத்தருக்கும் ஒரு கஷ்டமும் வராது.


இதற்கெல்லாம் விசை நம்மிடமே இருக்கிறது. 


.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).