உலகில் பெரியது எது?
உலகில் பெரியது எது?
என்று நம்மில் எழும் கேள்விகான பதில்.
உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது.
ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது.
எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன்.
எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன்.
திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது.
எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால்,
அந்த அகத்தியரும் கலயத்தில்.(சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.
எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது.
எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது.
பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை,
உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள்.
எனவே உமையவள்தான் பெரியவள் என்றால்,
அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள்.
எனவே சிவன்தான் பெரியவன் என்றால்,
அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான்.
எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்கிறாள் ஒளவையார்.
காரணம் இறைவனே அடியார்களின் மனதில் வாழ்க்கிறான்.
ஊரில் கோவில் இருப்பது பெருமையை இல்லை. அக்கோயிலுக்கு பக்தர்களின் வருகையால் ஸ்தானித்தம் பெருகிறது என்கிறார்கள்.
எனது அடியார்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டே காரணம் இறைவன் அடியார்களின் நெஞ்சத்தில் உறைந்து இருக்கிறான்.
அரசன் கட்டிய கோவிலை விட பூசலனார் எனும் அடியார் கட்டிய மனக்கோயிலில் இறைவன் இருந்தான். அந்த கோவில் நடக்கும் திருகுட நீராட்டிற்கு செல்வேன் மன்னர் கனவில் தோன்றி கூறினான்.
எனவே அடியார்களே பெரியவர்கள் இறைவனை விட என்பது சான்றோராகள் கூற்று.
படித்தில் பிடித்தது
ஓம் நமசிவாய 🙏🏻
Pugal Machendran அவர்களின் பதிவு 🙏🏻

Comments
Post a Comment