குரு என்பவர் யார்?.
குரு என்பவர் யார்?.
குரு என்பவர் ஒரு வழிகாட்டி/ ஆசிரியர்/நிபுணர் ஆவார்.
இவர் பொதுவாக இந்து மற்றும் அனைத்து சமயங்களில் ஒருவரின் அறிவுத் துறையில் வழிகாட்டுபவராக இருப்பார்.
ஒரு குரு, சீடர்களுக்கு ஆன்மீக மற்றும் பல்துறை அறிவை போதிக்கிறார்.
சீடர்களின் அறியாமை எனும் இருளை அகற்றி,
ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவர் குரு ஆவார்.
இந்து சமயத்தில், குரு மிகவும் மதிக்கப்படுகிறார் மற்றும் தீட்சை வழங்கும் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
எவ்வளவோ மஹான்கள் ஹிந்து மதத்தில் இருந்துள்ளனர்.
உதாரணமாக
ஆதிசங்கர பகவத்பாதாள்/காஞ்சிமஹாபெரியவா/குரு ராகவேந்திரர்/தாயுமானவர்போன்ற பல மஹான்கள்
அதில் நமக்கு குருபீடமாக இருந்து வழி நடத்தியவர் மஹாபெரியவா. அவர் நாம் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவர்.
குரு/சந்நியாசி என்ற பதத்திற்கு உதாரண புருஷராக விளங்கியவர்.
நமது கலாச்சார/மாண்பு/வேதம்/வேதாந்தம் எதில் சந்தேக இருந்தாலும் அதை விளக்கி நம்மை நல்வழிபடித்திய மஹான் ஆவார்.
நம்மை என்ன நினைக்கிறோமோ அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவரின் தெய்வத்தின் குரல் என்ற ஆன்மீக சொற்பொழிவு அமைந்து இருக்கிறது.
அதற்கு உதாரணமாக தான் தற்போது பதிக்கிற தெய்வத்தின் குரல் பதிவுகள் அமைந்துள்ளது.
மேலும் சரஸ்வதி குரு ஹயக்ரீவர் கூருமுனி அகத்தியருக்கு அம்பாளின் அறிவுத்திலின் லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.
இங்கு அம்பாளே குருவாக இருந்தார் ஆதிசங்கரபகவத்பாதாள்/அபிராமி பட்டருக்கும்.
அதனால் தான் அவர்களால் சௌந்தர்யலஹரி மற்றும் அபிராமி அந்தாதி போன்ற கிரந்தங்களை படைக்க முடிந்தது.
பல மஹான்களுக்கு அம்பாள் அருளினால் கவிபாடும் திறன் பெற்றனர்.
கவிகாளமேகம்/கவிகாளிதாஸ்/மூகர்/தாயுமானவர் போன்ற பல மஹான்கள் இதற்கே உதாரணம்.
https://www.facebook.com/share/p/1Dg4ZT8fMe/
குருவின் பங்கு:
குரு, சீடர்களுக்கு அறிவை வழங்குபவர் மட்டுமல்ல,
அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
குருவின் முக்கியத்துவம்:
ஆன்மீகப் பாதையில், குரு ஒருவரின் குருகுலத்தில் உள்ள சீடர்களுக்கு வழிகாட்டியாக இருந்து,
அவர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கி, ஞானம் என்னும் ஒளியை ஏற்றுகிறார்,
அவ்வாறாக நமது சமகாலத்தில் வாழ்ந்த மஹான் மஹாபெரியவா.
அவர் பேசாத விஷயங்களே இல்லை எனலாம்.
நமக்கு ஏதாவது சந்தேகம் நமது சாஸ்திரத்திலா; சம்பிராயத்திலா அல்லது வேதத்திலா என அனைத்திற்கு தெய்வத்தின் குரல் மூலமாக நல்ல விஷயங்களைச் சொல்லி நம்மை செம்மைப்படுத்தி வழிநடத்துவதற்காக வாழ்ந்த மஹான் ஆவார்.
According to Hindu tradition.
குருவின் இலக்கணம்:
ஒரு குரு, சாத்திர உண்மைகளின் வடிவம் மற்றும் பருப்பொருளின் தளையிலிருந்து விடுபடுவதற்காகச் செய்த ஒருவரின் விண்ணப்பங் களுக்குப் பதிலளிக்க இறைவனால் நியமிக்கப்பட்டவர் ஆவார்,
குருவின் நோக்கம்:
ஒரு குரு, சீடர்களை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதோடு, அவர்களின் உள் ஒளியை உணரவைத்து, முக்தி நிலையை அடையவும் உதவுகிறார்.

Comments
Post a Comment