அபிராமிஅந்தாதிபாடல்# - 35
#அபிராமிஅந்தாதிபாடல்# - 35
மனதிற்கு பிடித்தாற்போல் திருமணம் நிறைவேறும்
திங்கள் பசுவின்
மணம் நாறும் சீரடி,
சென்னி வைக்க,
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா,
எண் இறந்த விண்ணோர்,
தங்கட்கு
இந்த தவம் எய்துமோ? -
தரங்க கடலுள்
வெங்கண் பணியனை
மேல் துயில்
கூறும் விழுபொருளே
தரங்க கடல் - பாற்கடல்
வெங்கண் - வெப்பம் ததும்பும் கண்.
வெப்பத்தால் சிவந்த கண்
பணியனை - பணி - பாம்பு,
அனை - தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை.
திருப்பாற்கடலில், ஆதி சேஷன் மேல் துயிலும் அன்னை வைஷ்ணவியே,
இங்கு அம்பாளும் நாராயணும் ஒன்றே அதாவது அவளே
சோட்டாணிகரையில்
#அம்மாநாராயணா மற்றும் #லெக்ஷ்மிநாராயணா என்று போற்றபடுகிறாள் என்பதை விளக்குகிறார் பட்டர்.
இங்கே பட்டர்,
அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.),
சந்திரனின் மணம் வீசும்
ஜோதிடத்தில் மனக்காரகன் சந்திரன் என குறிப்பிடுகிறது.
அந்த மனத்தில் உன் திருவடி தாமரையால் பதித்தனால்,எனது மனதை நீ ஆட்கொண்டததால்.
நினது சீர்மிகு திருவடிகளை,
என் தலைமேலும் நீ வைக்க
நான் என்னதவம் செய்தேனோ!
நம் முன்னோர்களும்,
தேவர்களும் கூட,
தங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.
தேவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் நான் கிடைக்கப்பெற்றேன்.
அதற்கு காரணம் எனது சிந்தனை முழுவதும் நீ நிறைந்ததனால் என்கிறார் பட்டர்.
அன்னையே! அபிராமியே!
திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே!
பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ!
விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!

Comments
Post a Comment