ஆடிதிருவாதிரையில் முப்பெரும் விழா.

கோவிலாக இருந்தாலும் அதற்குரிய கால பிரமாணத்தில் தான் அனைத்தும் நடக்கும்.

அவ்வாறான நிகழ்வு இந்த வருட ஆடிதிருவாதிரையில் முப்பெரும் விழா.


காஞ்சிமடமும் கங்கைக் கொண்ட சோழபுரமும் மற்றும் பிரதமர் மோடி


 இது நாள்வரை மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவும் பல ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருகிறது.


இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, 


கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் பணிகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துக் கூறினர்.


இதில் பெரும் உற்சாகம் அடைந்த மத்திய நிதியமைச்சர், 


இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்தவும், இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் இசை நிகழ்ச்சியை நடத்தவும் பெரும் ஊக்கமளித்தார்.


மத்திய தொல்லியல், கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அவர்களும் இதில் பெரும் ஆர்வம் காட்டினார்.


சைவ ஆதினங்களை அழைத்து மிகப்பெரிய அளவில், ஆடி திருவாதிரை விழாவை நடத்த காரணமாக இருந்தார். 


இந்த தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆடி திருவாதிரை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 


நானே வருகிறேன் என கூறினார். அதன்படி, கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலுக்கு வருகை தந்து, சோழமன்னர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, ஆடி திருவாதிரை விழாவில், 


காஞ்சி மகா பெரியவரின் கட்டளையை ஏற்று கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுப் பணிகளை செய்த லட்சுமி நாராயணன் அவர்கள், தனது மனைவியுடன் பங்கேற்று மகிழ்ந்தார்.  


அப்போது அவரிடம் ஆசி பெற்று உரையாடிய போது,


 "கங்கைகொண்ட சோழபுரத்திற்காக, சோழீசுவரர் கோவிலுக்காக எத்தனை கமிட்டிகள் அமைத்தாலும், அந்த சிவன் தான் கமிட்டியின் தலைவர் என்பது என் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்" என காஞ்சி மகா பெரியவர் கட்டளை இட்டதை நினைவு கூர்ந்தார்.


இதுநாள் வரை அவ்வளவாக உலகமறகயாமல் உள்ளுர் மக்கள் மட்டுமே அறிந்ததை உலகறிய செய்தவர் தமிழ் மீது ஈடுபாடு உள்ளவர்.


தமிழ், தமிழர் அடையாளத்தை அழித்தும் வரும் சக்திகள், சோழ மன்னர்களை எங்கும் முன்னிலைப்படுத்தாமல் இருந்தனர். 


ஆனால், உலகம் போற்றும் உத்தம தலைவர் பிரதமர் நரேந்திர மோடி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கே வருகை தந்து, மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு 1000 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்.


இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கவை. 


சோழ மன்னர்கள் பாரதத்தின் அடையாளம். அன்பே சிவம் என்ற சைவ சிந்தாந்தம் உலகின் பிரச்னைகளுக்கு தீர்வை தரக்கூடியது என்ற பிரதமர் மோடியின் உரை காலம் கடந்தும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).