அம்பாளின் கருணை
அம்பாளின் கருணை
போன ஞாயிறு மிகவும் அருமையான தினம்
அன்று எனது நண்பர் மற்றும் வாடிக்கையாளரை சந்திக்கும் வாய்ப்பு.
அவரிடம் சில மணிக்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அவரின் சந்திப்பு பிறகு அவர் என்னை அவரது பூஜை அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவரின் அழைப்பு இணங்க உள்ளே தரிசிக்க சென்றால்.
அம்பாள் ஶ்ரீசக்கரத்தில் மற்று தேவிகளுடன் வீற்றிருக்கும் அழகான படம்.
பார்பதற்கு அவ்வளவு அழகே. அம்பாளை தரிசித்த பிறகு,
ஸ்வாமி இதே மாதிரி 3படங்கள் வாங்கினேன்.
ஒன்று எனது வீட்டிற்கு,மற்றொன்று எனது ஆபீஸிற்கு ,மூன்றாவது தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வாங்கி வைத்துள்ளேன்.
அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்னிடம் திருவுருவ படத்தை கொடுத்தார்.
படத்தை பெறும் போது மெய்சிலிர்த்து போனேன். தினந்தோறும் எந்த அம்பாளை தேவிகட்கமாலா ஸ்தோத்திரத்தில் பாராயணம் செய்கிறோனோ.
அதே அம்பாள்களை ஶ்ரீசக்ரத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்த்து போனேன்.
காரணம் நாம் அம்பாள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தாள். அவள் நம் பக்திக்கு செவிசாய்ப்பாள் என்பது திண்ணம்.
காரணம் முதலில் பஞ்சப்ரேத ஆசான என்ற நாமத்திற்கு இணங்க சிவகுமார் என்ற அம்பாள் உபசாகரிடமிருந்து 2005ல் லலிதாம்பிகை அம்பாள் திருவுருவ பட வருகை.
அதன்பிறகு எனது மாமியார் மறைவுக்கு பிறகு அவர்கள் பூஜித்த அனைத்து அம்பாகளும் எனது பூஜை அறையில் வீற்று இருக்கிறாள்.
அடுத்தது தேவிகட்கமாலா ஸ்தோத்திர புத்தகத்தை கிடைக்கப் பெற்றேன்.
அடுத்தாக லலிதாம்பிகை சந்நிதிலியிலிருந்து மஹா மேருவும் மற்றும் ஞாயிறன்று ஶ்ரீசக்கரத்தில் அம்பாள் வீற்றிருக்கும் அழைக்கிய திருபடம்.
இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்.
மாலை ஏதாவது அம்பாளை தரிசிக்க வேண்டும் என என்மனம் எண்ணியது எனவே அம்பாளை தரிசிக்க அம்பாளை சந்நிதியை அடைத்துபோது.
எங்கிருந்து வந்தது என தெரியவில்லை, இடியுடன் கூடிய பெருமழை,
அதனால் கோவிலில் 27பிரதக்க்ஷணம் செய்வதற்கான ஒரு கொடுப்பினை கிடைக்கப்பெற்றேன்.
அதன் பிறகு மற்றொரு அம்பாளை தரிசிக்க வேண்டும் என எண்ணிய போது. பெய்த்த மழை எங்கு சென்றது என தெரியவில்லை.
அம்பாளின் சந்தியை அடைந்த போது அம்பாள் வெளிபுறப்பாட்டிற்கு உற்சவர் அலங்காரம் செய்து தயார் நிலையில் இருந்தாள்.
அது என்னவோ நான் அம்பாளை தரிசிக்க வேண்டும் என எண்ணினாலோ என்பதால் என்னவோ மழை பெய்தாற் போல் இருந்தது.
அம்பாள் தரிசனம் முடிந்த ,பிறகு அம்பாள் வெளிபுறப்பாடு/வீதிஉலாவை தரிசிக்கும் பாக்கியம்.
மொத்தத்தில் ஞாயிறன்று மிகவும் மன நிறைவான நாள்.
அம்பாளின் வருகை மற்றும் அம்பாளின் தரிசனம்.
எல்லாமே அவளே,சதாசர்வ காலம் அம்பாள் சிந்தனை நம்மில் இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் பிரதக்ஷிணம் ஆவாள் என்பது நான் கண்ட உண்மை.

Comments
Post a Comment