ஏன் பகவானின் பாதாரவிந்ததை நாட வேண்டும்?.
ஏன் பகவானின் பாதாரவிந்ததை நாட வேண்டும்?.
மஹான்களின் விளக்கம்
எல்லாம் மஹான்களும் சொல்வது ஒன்றே பகவானின் பாதாரவிந்ததில் சரணடைங்கள் என்பதை தான்.
காரணம் இந்த கலியுகத்தில் நாம் கறையேறுவதற்கு அது ஒன்றே மார்க்கம் அது பகவானின் திருநாமத்தை பாராயணம் பண்ணுவது.
எப்போது நம்மாள் சொல்லமுடியுமா அப்போது சொல்ல ஆரம்பித்தாள் தான் நம்மாள் சொல்லமுடியும்.
இப்போது வேண்டாம் எப்போது வேண்டுமோ அப்போது சொல்வோம் என நினைத்தால் அப்போது நம்மாள் சொல்ல இயலாது.
இதையே தான் ஆதிசங்கர பகவத்பாதாள், அபிராமி பட்டர் மற்றும் மஹாபெரியவா தனது தெய்வத்தின் குரலில் சொல்லியுள்ளார்.
அபிராமி பட்டர் தனது ஒவ்வொரு அபிராமி அந்தாதியிலும் சரணாகதி தத்துவத்தையே வலியுருத்திருகிறார்.
மஹாபெரியவா தனது தெய்வத்தின் குரலில் நான் சொல்வதை பத்து பேராவது சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் தான் திரும்ப திரும்ப பகவான் பாதார விந்ததை அடைய வலியுருத்துகிறார்.
காரணம் அவர்களுக்கு கரையேறுவதற்கு வழி தெரியாமல் இதை சொல்லவில்லை.
அது நமக்கு புரியவேண்டும் என்பதற்காக கூறுகிறார்கள்
அபிராமி அந்தாதியில் பட்டர்
#ததியுறுமத்தில்சுழலும்என்ஆவி"
என்பது அபிராமி அந்தாதி பாடலில் வரும் ஒரு வரிகளாகும்.
இதன் பொருள்,
பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் சிக்கி,
எது நல்லது
எது கெட்டது
என்று தெரியாமல் தவிக்கும்
தன் உயிர், ஒரு நிலையான கதியைப் பெற்று அருள வேண்டும் என்று அபிராமி தாயிடம் வேண்டிக் கொள்வதாகும்.
பாடலின் விரிவான பொருள்:
"ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி":
இந்த சொற்றொடர்,
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஆன்மாவை குறிக்கிறது.
அதாவது, எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் ஆத்மா.
"தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய்":
இந்த வரிகள்,
அப்படி தவிக்கும் ஆன்மா ஒரு நிலையான வழியைப் பெற வேண்டும் என்றும்,
அது அபிராமி தாயின் கருணையில் இருக்க வேண்டும்
என்றும் அபிராமிபட்டர் வேண்டுகிறார்.
நம்மளை மாதிரி கரையேற தெரியாமல் சம்சார சஹரத்தில் தத்துளிக்கும் ஜீவனை கரையேறுவதற்காக தான் சொல்லிகிறார் என்பதை நாம்
உணர வேண்டும்.
இதை தான் சங்கரர்
புனரபி ஜனனம் புனரபி மரணம்"
என்பது பிறவிச் சுழற்சியைக் குறிக்கும் ஒரு வடமொழி சொற்றொடராகும்.
இது மீண்டும் மீண்டும்
பிறப்பதையும், இறப்பதையும் குறிக்கிறது.
இச்சொற்றொடரின் பொருள்,
இந்த உலக வாழ்வு முடிவில்லாத
பிறப்பு-இறப்பு சுழற்சியில் சிக்கியிருப்பதாகவும்,
இந்த சிக்கலிலிருந்து கருணை புரிந்து கடவுள் காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.
இது பஜ கோவிந்தம் பாடலில் வரும் ஒரு பிரபலமான பகுதியாகும்.
சங்கரர் ஒரு படி மேலே போய் தன்னை ஆறுகாலி வண்டு என்கிறார்.
எவ்வாறு மாப்பூவில் உள்ள தேனுக்கு ஆசைப்பட்டு கடைசியில் தான் வேறு மாம்பழம் வேறு என தெரியாமல் அதோடு ஒன்று விடுகிறதோ.
அதை மாதிரி நானும் உன்னுடைய பாதாரவிந்தத்தில் இரண்டர கலக்க வேண்டும் என்கிறார்.
அந்த சௌந்தயலஹரி ஸ்லோகம்
"தாதானே தீனேப்யஹ ஷ்ரியமாநிஷாமாஷானுசத்ருஷீம்
அமந்தம் சௌந்தர்யப்ரகாரமகரந்தம் விகிராதி!
தவஸ்மின்மன்மந்தாராஷ்டபகசுபாகே யாது சரணௌ
நிமஜ்ஜன்மஜ்ஜீவாஹ காரணாசரணஹ ஷட்சரணதாம்!"
உன் பாதங்கள் அழகின் தேனை சொட்டும் ஒரு உண்மையான பூக்களின் கொத்தாக உருவாகின்றன,
மேலும் உனது ஏழை பக்தர்களுக்கு தாராளமாக செல்வத்தை வழங்குகின்றன.
ஆறு புலன்கள் (மனம் உட்பட) கொண்ட என் வாழ்க்கை அந்த பாதங்களில் என்றென்றும் ஆறு கால் தேன் உறிஞ்சும் தேனீயாக மாறட்டும்."
எனவே எல்லாம் மஹான்களும் பகவானிடம் சரணாகதி இந்த பிறவியிலிருந்து கறை ஏறுவதற்கான மார்க்கம் என்கிறார்கள்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#


Comments
Post a Comment