*மஹா பெரியவா அருள்வாக்கு*


*எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனதை அன்பு மயமாகச் செய்து கொள்வதே அகிம்சை.


* புத்திப்பூர்வமாக ஒரு தவறைச் செய்தால் தான் அது பாவமாகிறது,


 புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலும் பாவம் இல்லை.


* நம்முடைய துன்பத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டு பிறருக்கு நன்மை செய்யாமல் இருந்து விடக்கூடாது. 


நம்மால் உலகம் சிறிதளவாவது நலமாக இருப்பதற்காக பாடுபட வேண்டும்.


* பலனை எதிர்பார்க்காமல் பொதுநலத்துடன் தர்மம் செய்ய வேண்டும்.


* இயற்கையில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. 


சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது. மலையும், சமுத்திரமும் கூட காலப்போக்கில் மாறுகின்றன என்பதால் உலக நடப்புகளை தெரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.


* குழந்தை குறும்புத்தனம் செய்தால் வீட்டில் கட்டிப்போடுகிறோம். நம்மிடம் ஆசை என்ற குறும்புத்தனம் இருப்பதால் ஈஸ்வரன் நம்மை கட்டிப் போடுகிறான்.


- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).