பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு

 #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹாரு



அந்த ஒரு படி மேலே இருக்கிறது என்பதை இன்று பதிவாக காணலாம்.


 இதுவரைக்கும் நாம் இரண்டையும் ஒப்பீடு செய்து கொண்டே வந்தோம். ஆனால், 


அது எந்த இடத்தில், எப்படி தாமரையை விட ஒரு படி மேலே இருக்கிறதெனில், 


தாமரை சூரியனைப் பார்த்து மலருகிறது அல்லவா! 


சூரியனின் ஒளி பட்டால் தாமரை மலருகின்றது. 


சூரியனின் ஒளிபட்டு சூரியனைப் பார்த்து தாமரை மலருகின்றது அவ்வளவுதான். 


ஆனால், அம்பிகையின் திருவடி தாமரையாக இருக்கிறது. 


ஆனால், சூரியனைப் பார்த்து மலருகிற தாமரையாக இல்லை. 


சூரியனே இறங்கி வந்து தாமரையானால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது, 


அம்பாளின் திருவடி. 


அதனால்தான் #ப்ரபாஜாலம் காண்பிக்கின்றது. 


சூரியனுடைய ஒளியைப் பெற்று மலரும் தாமரை தானாக ஒளி வீச முடியாது. 


தாமரைக்கு ஒளி வீசக்கூடிய தன்மை கிடையாது. 


ஒளியைப் பெற்று மலரக் கூடிய தன்மைதான் உண்டு. 


இரவு நேரமானால், 


தாமரை மீண்டும் கூம்பிவிடும். 


இருளில் நம்மால் தாமரையை பார்க்க முடியாது. 


ஏனெனில், தாமரைக்கு என்று 


ஒளி கிடையாது.


ஆனால், 


இங்கு அம்பிகையினுடைய திருவடி எப்படி இருக்கிறதெனில், தாமரை மாதிரி இருக்கிறது. 


ஆனால், சூரியனின் ஒளியை வாங்கி மலரக் கூடிய தாமரைபோன்று இல்லை. 


சூரியனாகவே இருக்கக்கூடிய தாமரையாக இருக்கிறது. 


சூரிய ஒளியையே தரக்கூடிய தாமரையாக இருக்கிறது. 


இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால், சூரியனுக்கே ஒளி கொடுக்கக்கூடிய தாமரையாக இருக்கிறது. 


இந்தத் திருவடி ஒளியினால்தான், சூரியனும் சந்திரனும் அக்னியும் நட்சத்திரங்களும் ஒளிவிட முடியும்.


இந்தத் திருவடி தாமரை ஒளி கொடுக்கவில்லையென்றால் 


சூரிய, சந்திர, நட்சத்திராதிகள் எதுவுமே ஒளி கொடுக்காது.


 இப்போது சொல்லக் கூடிய விஷயமானது கடோபநிஷத்திலும் சொல்லப்பட்டுள்ளது.


``ந தத்ர சூர்யோ பாதிந சந்திர


தாரகம்


நேமா வித்யுதோ பாந்தி குதோயம்


அக்னிஹி


தமேவ பாந்தம் அனுபாதி சர்வம்


தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி’’


எங்கு சூரியனும், சந்திரனும், அக்னியும், மின்னலும், நட்சத்திரங்களும் ஒளிவிடவில்லையோ, 


சூரியனுக்கும் சந்திரனுக்கும் அக்னிக்கும் மின்னலுக்கும் நட்சத்திரங்களுக்கும் யார் ஒளி கொடுக்கிறானோ, 


அவன்தான் உண்மையாக ஒளியாக இருப்பவன். 


அந்த ஒளியைத்தான் தியானம் செய்ய வேண்டுமென்று கடோபநிஷத் சொல்கிறது. 


நாம் ஒளி என்று எதையெல்லாம் பார்க்கிறோமோ அதாவது வெளியே காணப்படும் சூரியனில் ஆரம்பித்து நமக்குள்ளேயே விளங்கும் ஞானசூரியன் வரைக்கும்… 


அதாவது பஹிர்முகமாக இருக்கும் சூரியனில் தொடங்கி அந்தர்முகமாக இருக்கும் ஞானசூரியன் வரைக்கும் ஒளி கொடுக்கக் கூடியது என்று கேட்டால், 


பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா.


இதில் என்னவொரு பெரிய விஷயமெனில், ஒளி கொடுக்கக் கூடிய பொருட்கள் எல்லாமே இயற்கையில் பார்த்தால்,


 வெப்பத்தையும் சேர்த்தே கொடுக்கும். 


சூரியன் ஒளி கொடுக்கக் கூடியது.# சூரியனின் வெப்பம் இருக்கிறது.


 அக்னி ஒளி கொடுக்கும். அக்னியிலும் வெப்பம் இருக்கிறது.


 மின்னலாக இருந்தாலும் சரி,


 நட்சத்திரங்களானாலும் சரி,


 சந்திரனாக இருந்தாலும் சரிதான், ஏன் சந்திரன்கூட சூரியனின் ஒளியை வாங்கி இப்படி அனுப்புகிறது. 


அதனால், சந்திரனுக்குரிய வெப்பமும் உண்டு. 


ஆனால், இங்கு அம்பிகையினுடைய பாதத்தை சொல்லும்போது ஒளிமயமான தாமரை என்று வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். 


ஆனால், அம்பிகையினுடைய பாதங்கள் ஒளிமயமாக இருப்பதால், வெப்பமாக இருக்குமா என்று கேட்டால், கொஞ்சம்கூட வெப்பமே இருக்காது.


எவ்வளவுக்கு எவ்வளவு ஒளி கொடுக்குமோ, 


அவ்வளவுக்கு அவ்வளவு குளிர்ச்சியாகவும் இருக்கும்.


ஏனெனில், 


அதேநேரத்தில் அந்த திருவடியில் சரணாகதி ஆகக்கூடிய பக்தர்களை காப்பாற்றுவதற்காக குளிர்ச்சியான திருவடியாக இருக்கிறது.


மென்மையான திருவடியாக இருக்கிறது, 


இந்த திருவடியில் குளிர்ச்சியாக இருப்பது என்னவெனில், அம்பிகையினுடைய கருணை.


இந்தத் திருவடியில் இருக்ககூடிய ஒளி எதுவென்று கேட்டால், 


நாம் அடையக் கூடிய ஞானம். 


ஞானம் அடையும்போது அங்கு கருணை என்கிற குளிர்ச்சி இருக்கும். ஞான அக்னி சுடாது. 


நாம் சாதாரணமாக சொல்லக் கூடிய அக்னி சுடும். ஆனால், ஞானாக்னி என்றைக்குமே சுடாது. 


அதனால் குளிர்ச்சியும் மென்மையும் பொருந்திய திருவடி. தாமரையை மதிப்பிழக்கச் செய்கிற திருவடி. 


அதே நேரத்தில், ஒளிமயமாக இருக்கக் கூடிய திருவடி. ஞானப் பிரகாசத்தை அளிக்கக் கூடிய திருவடி. 


இதை நாம் தத்துவார்த்தமாக பார்க்க வேண்டுமெனில், தத்துவத்தில் நாதம் பிந்து என்று சொல்லுவோம். 


நாதம் பிந்துவிலிருந்துதான் பிரபஞ்சத்தின் சிருஷ்டி ஆரம்பிக்கின்றது.


 நாதம் என்பது ஒலி (Sound). 


பிந்து என்பது வெளிச்சம் (Light).


 நாதம் பிந்து இவை இரண்டும் சேர்ந்துதான் இந்த பிரபஞ்சம் விரிவடைகின்றது. 


அதனால்தான் அருணகிரிநாதர் 


நாத பிந்து கலாதி நமோ நம… என்று பாடியிருக்கிறார்.


இப்போது பிந்து சொரூபம் என்று சொல்கிறோம் அல்லவா… எல்லா வெளிச்சத்திற்கும் மூலமான ஒரு வெளிச்சம் இருக்கிறதல்லவா அதுதான் பிந்து. 


அந்த மூல வெளிச்சமான பிந்து சொரூபம்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாமம் ஆகும். 


இந்த நாமம் என்ன என்று கேட்டால் ஒளிமயமான பிந்து சொரூபத்தைக் காட்டக் கூடியது. 


இதற்கு அடுத்த நாமமானது நாத சொரூபத்தை காண்பிக்கக் கூடியது.


 அதனால், 


இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாமமும் சொரூபத்தில் கொண்டுபோய் நம்மை சேர்த்துவிடும். 


அந்த நாமத்தின் பொருளானது சொரூபத்தையே அம்பிகையான ஆத்மாம்பிகையையே சுட்டிக் காட்டும்.


இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).