காற்று அநேகமாக எங்கே செல்ல முடிகிறது.

 தெய்வத்தின் குரல்-3.

காற்று அநேகமாக எங்கே செல்ல முடிகிறது. 



அதற்கு ரூபம் இருக்கிறதோ?


அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம்.


 காற்று இல்லாத சூனியத்தை (vaccum)கா கூட உண்டாக்குகிறார்கள்.


ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. 


மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். 


அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்?


ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. 


அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் அது சந்தோஷப்படுமா?


அவள் இருந்தால் மட்டும் போதாது, அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.


அவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் 

உணர முடியவில்லை. 


அருவமாகவே அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் போதவில்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, 


நாம் அன்பு செய்வதற்காகவே, 


அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். 


ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா?


இப்படித்தான் ‘க்ருத காடின்யவத்’ என்கிற நியாயப்படி, 


பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.


அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்?


நாளைய பதிவாகp

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).