அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர்

 தெய்வத்தின் குரல் பாகம்-5.


அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர்



அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று ‘


சியாமளா தண்டகத்தில்’ ஸ்துதி செய்கிறார். 


‘வர்ணம்’ என்றால் ‘நிறம்’ என்று நினைப்பீர்கள்.’வர்ணம்’ என்றால் ‘அக்ஷரம்’ என்று அர்த்தம். 


ஒலி வடிவான அக்ஷரங்களும், 


ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை


ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. 


நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.


ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. 


இதை ‘வீசிதரங்கம்’ என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை ‘முகுளம்’ என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். 


இவற்றுக்குப் பெயர் “மாத்ருகா” என்பது. ‘மாத்ரு’ என்றால் ‘தாயார்’ என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 


சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, 


அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்; அதோடுகூட,


இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். 


இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்சம் முழுக்க வந்தது. 


நாத ஸ்வரூபிணியான அம்பாளே


 ஓங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். 


அ,உ,ம மூன்றும் சேர்ந்து ‘


ஓம்’ என்று ஆகிறது. 


அ – சிருஷ்டி;


 உ – பரிபாலனம்; 


ம – சம்ஹாரம் என்பார்கள். 


அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். 


இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், 


உ – ம – அ – என்றாகும். அதுதான் உமா என்பது. 


உபநிஷதமும் அவளை


 ‘உமாஹைமவதி’ 


என்றே சொல்கிறது


https://searchingismyjob.blogspot.com/2025/11/blog-post_15.html

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).