அம்பாள் எங்கு /எந்த ரூபத்தில் இருக்கிறாள்.
கடந்த சில தினங்களாக அம்பாளின் சொரூபம் பற்றிய பதிவை கண்டோம்.
அம்பாள் எங்கு /எந்த ரூபத்தில் இருக்கிறாள்.
அவள் சகல வியாபினி/அவள் எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கிறாள்.
காரணம் அவள் லோகமாதா/லோகஜனனி.
அவள் பஞ்ச பூதங்களாக இருக்கிறாள்.
அதற்கு உதாரணம் நாம் விடும் மூச்சு காற்று அதுவே இந்த உடலுக்கு ஆதாரம்.
உடல் சிவன் என்றால் உயிர் ஆகிய ஆத்மா அம்பாள்.
இவற்றின் இணைவே அர்த்தநாதீஸ்வரர் தத்துவம்.
இதில் எது உயர்ந்தது,ஒன்று இல்லாமல் ஒன்று இருந்தால் அது பிரயோஜனம் இல்லை.
அதே மாதிரி பரபிரம்மம் அதற்கு அசைவு இல்லை.
அதனுள் உள்ள சக்தியாகிய அம்பாள் அதை சலனபடுத்தி லோக சிருஷ்டிக்கு உதவிக்கிறாள்.
அதனாள் அவள் சிருஷ்டி கர்தா.
அவளே சப்தம் ஆகிறாள்.
எவ்வாறு மொழியும் அதன் பொருளும் முக்யமோ.
அதை போல் சிவனும் சக்தியும் முக்யம்.
ப்ரயள காலத்தில் இவை அனைத்தும் அதனுள் அடக்கம்.
காரணம் எங்கிருந்து பிறந்ததோ அல்லது ஜனித்ததோ அங்கேயே ஐக்கியம் ஆகிறது.
இதுவே
லோக இயக்கம் ஜனனம் மரணம்.
இதைதான் ஆச்சாரியர்
புனரபி ஜனனம்
புரனபி மரணம்.
அது எது வரை அதன் கர்மா கழியும் வரை.
அது கெட்ட கர்மவோ அல்லது நல்ல கர்மாவோ அது வரை இந்த சுழற்சி நட்க்கும் என்பதே உலக நியதி.
நம்மை நல்வழிபடுத்தவே குருவாகிய மஹான்களின் ஜனனம்.
நம்மை சம்சார சாகரத்திலிருந்து கரையேற்றுபவர்கள் அவர்களே.
குருவின் மூலமாக ஞானத்தை பெறுதல் மிகவும் தெளிவைத்தரும்.
#ஓம்குருவேசரணம்#

Comments
Post a Comment