ஹிந்து சனாதன தர்மம் கூறிய நான்கு நிலைகள்.

ஹிந்து சனாதன தர்மம் கூறிய நான்கு நிலைகள்.



ப்ரம்மசர்யம்


க்ரஹஸ்தம்


வானப்ரத்ஸம்


சந்நியாசம்


தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவை மனித வாழ்க்கையின் நான்கு முக்கிய நோக்கங்கள் (புருஷார்த்தங்கள்) ஆகும். 


தர்மம் என்பது கடமை மற்றும் ஒழுக்கமான வாழ்வு; 


அர்த்தம் என்பது செல்வம் மற்றும் பொருள்; 


காமம் என்பது ஆசைகள் மற்றும் இன்பம்; 


மோட்சம் என்பது இந்த ஆசைகள் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபடும் இறுதி விடுதலை. 


இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், 


இவை ஒன்றோடொன்று இணக்கமாகப் பின்பற்றப்பட வேண்டும். 


இவைகளை இதன் மூலமாக பெறவேண்டும் என்கிறது


அவை


தர்மம்


அர்த்தம்


காமம்


மோக்ஷம்


ப்ரம்சர்யத்தின் போது குருவின் மூலமாக தர்மத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்.


எதற்கு எது தர்மம்/அதை அவ்வாறு கடைபிடிப்பது/அதன் வழியில் எவ்வாறு செல்வதை ஈட்டுவது.


அதற்காக தான் அடுத்ததாக


 #அர்த்தததை# வைத்தனர்.


தர்ம வழியில் பணத்தை ஈட்டுவது.


அதன்பிறகு காமம்-என்பது ஆசை .


அதைதான் க்ரஹஸ்தம் என்றனர்.


திருமணத்தை முடித்து தர்ம வழியில் வாழ்க்கையை நடத்துவது.


புத்தரின் வரிகள் ஆசையே துன்பத்திற்கு காரணம்.


அதனால் ஆசைப்படக்கூடாதா என்ற கேள்வி எழும்.


ஆசையை நிறைவேறுகின்ற ஆசையாக இருக்க வேண்டும்.


பேராசை இருக்ககூடாது.


அது நமது வாழ்க்கையை தடம் மாற்றும்.


அடுத்ததாக மோக்ஷம்.


அதற்கு தான் அடுத்த நிலையான வனப்ரஸ்தம் என்பதை வைத்தனர்.


ஆசை விடுத்தல் அல்லது பற்றற நிலை.


சம்சாரத்தில் இருந்து செய்யவேண்டிய கடமையை செய்ய வேண்டும்.


ஆனால் அதிலிலேயே  விழுந்து விட கூடாது.


அதாவது தாமரை இலை நீர் போல் இருக்கவேண்டும்.


நாம் எதற்கு பிறந்தோம் என்பதை உணர வேண்டும்.


இந்த காலத்தில் வனப்ரஸ்தம் சாத்தியம் இல்லை.


ஆனால் சம்சாரத்திலிருந்துக் கொண்டு இறைவனின் தேடுதல் வேண்டும்.


அடுத்ததாக சந்யாசம் ,


வனப்ரஸ்தத்தில் இருக்க பழகிவிட்டால்.


சந்நியாசம் என்பது ஒட்டாமல் இருப்பது.


நியாசம் என்பது ஒட்டி இருந்தல்.


எதில் ஒட்டி இருத்தல் குடும்பத்தில் இருத்தல்.


சந்+நியாசம் அதிலிருந்து விலகி இருத்தல்.


இதைதான் பல மஹான்கள் கடைபிடித்தனர்.


ஆதிசங்கர பகவத்பாதாள் முதல் காஞ்சி மஹாபெரியவா வரை.


இந்த கலியுகத்தில் இது சாத்தியமா.


இது சாத்தியமா,


சாத்தியமே நாம் மனது நினைத்தால் அனைத்தும் சாத்தியமே.


சந்நியாசம் என்பது அனைத்திலிருந்து விடுபட்டு இருத்தல்.


ஆனால் இந்த காலகட்டத்தில் வனப்ரஸ்தம் மற்றும் சந்நியாசம் கிரஹஸ்தனுக்கு சாத்தியம் இல்லை.


ஆனால் கிரஹஸ்த நிலையிலிருந்து இதை கடைபிடிக்கலாம் இந்த கலியுகத்தில் என்பதை மஹான்கள் பலவித வழிகளில் நமக்கு உணர்த்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).