எது ஞானம் தெளிவது ஞானம் .
எது ஞானம் என்பதை கண்டோம்.
தெளிவது ஞானம்
எது தெளிவது ஞானம்.
அறிவு தெளிவது ஞானம்.
எதுவும் நம்மால் இல்லை, நமக்கு மேல் ஓரு சக்தி உள்ளது என்பது தெளிந்த ஞானம்.
அந்த தெளிவு இல்லையேல் குழப்பமே.
குழப்பம் எப்போது வரும் ,நான் அகந்தை மேல் எழும் போது.
தெளிந்த நீரில் அனைத்தும் தெளிவாக இருக்கும்.
அதுவே குழம்பிய குட்டையானால் எதுவும் தெரியாது.
நமது மனமும் அவ்வாறே தெளிந்தால் அது ஞானத்தை பெறலாம்.
அதுவே தெளிவு இல்லை எனில் அகங்காரம் மேலிடும்.
உதாரணத்திற்கு photo chemistry ல்.
Fluorescent பொருளின் மீது வெளிச்ச ஆற்றல் படும்போது.
அதில் உள்ள electronகள் ஆற்றலை பெற்று மேல் எழும் அது நிரந்தரம் இல்லை.
அந்த வெளிச்ச ஆற்றல் கடந்தால் அது சாதாரண நிலைக்கு திரும்பும்.
அதை போல் துக்கம் மற்றும் இன்பத்திற்கு நாம் காரணம் இல்லை.
எனவே அதை சமமாக ஏற்க்ககும் பக்குவம் வேண்டும்
அந்த பக்குவத்திற்கு ஆன்மீகத்தில் ஈடுபட்டால் அது நம்மை தெளிவுப்படுத்தும்.
அந்த ஞானத்தை பெற நாம் பக்குவபட வேண்டும்.
அந்த பக்குவத்திற்கு பல துன்பங்ளை அனுபவிக்க வேண்டும்.
அது எவ்வாறு இரும்பானது மிகவும் வழுவானது. அதை நாம் நினைக்கும் உருவத்திற்கு மாற்ற அதை நெருப்பில் இடவேண்டும்.
அந்த மாதிரி நாமும் பல துன்பங்களை அனுப்பவித்த பிறகு வருவது பக்குவமே ஞானம்.
இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.
மஹான்கள் முதல் ஞானிகள் வரை அனைவரும் இதை கடந்து வந்து உள்ளனர்.
அவர்களது வாழ்க்கை அனுபவம் நமக்கு சிறந்த பாடம் ஆகும்.

Comments
Post a Comment