தேவியின்தாடங்கமஹிமை

 ஆதிசங்கரபகவத்பாதாள்

இந்த தாடங்க மஹிமையைஅறிந்து தான் அம்பாளுக்கு தாடங்கத்தை சாற்றினாரோ


#தேவியின்தாடங்கமஹிமை



விஷ பயம், 


அகாலம்ருத்யு நிவாரணம்


#சௌந்தயலஹரிஸ்லோகம்28


ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்


விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத:


கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா


ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா               


#பொருள்


பயங்கரமான மூப்பு, மரணங்களை விலக்குகிற அமிருதத்தை உண்டும்கூட 


பிரம்மா இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  ப்ரளய காலத்தில் அழிகிறார்கள். 


கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவனுக்கு காலத்தின் முடிவு இல்லை என்றால் 


அதன் காரணம் உன்னுடைய காதில் உள்ள தாடங்க மஹிமைதான்.


பரமசிவனே, 


எந்தப் பராசக்தி உனது பாதி சரீரம் உடையவள் ஆகின்றாளோ அவள் உலகனைத்திற்கும் மருந்து.


 


ருத்திரனாகிய உனக்கும் அவள்தான் மருந்து. 


விஷத்தை உண்டும் அவள் அருளால்தான் எங்களுக்காகப் பிழைத்து இருக்கிறாய்.          — ருத்ரம்


தேவியினுடைய தாடங்கம் ஸ்ரீசக்கர ரூபமே. ஸ்ரீசக்கரத்தை ஸுவாஸினிகளும் ஆராதிக்கலாம்,


 எந்த ஸுவாஸினியானவள் புருஷனுக்குப் பரிபூர்ணமான ஆயுளைக் கருதி அதன்மூலம் குடும்பத்தில் பரம ஸௌபாக்கியத்தை எதிர்பார்க்கிறாளோ 


அந்த ஸுவாஸினியானவள் மஹா குருமூலமாகத் தனது கணவனை மேற்சொண்ண வித்தையை (பஞ்சதஶாக்ஷரி மந்திரத்தை) கிரகித்துக்கொள்ளும்படி செய்து புருஷனுடைய முகமாகத் தான் அந்த வித்தையைக் கிரகித்துக் கொண்டு,


ஒவ்வொரு தினத்திலும் யதாசக்தி ஜபம் செய்து மஞ்சள்பொடியில் ஸ்ரீசக்கர லேகனத்தைச் செய்து மூலமந்திரத் தாலேயே ஷோடசோபசார பூஜைகளையும் செய்து, 


சக்தியை அனுசரித்து லலிதா ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்தரம் இவைகளால் குங்குமத்தாலோ சிவப்புப் புஷ்பத்தாலோ அர்ச்சனையும் செய்து, நிவேதனாதிகள் செய்து, 


பிரதக்ஷிண நமஸ்காராதிகளால் பரதேவதையை ஆராதனம் செய்து வரவேண்டும். 


அப்படியானால் அவள் புருஷனுக்குத் தீர்க்காயுளை ஸம்பாதித்துத் தானும் மஹாபாக்யவதியாக நீடித்து வாழ்ந்து அவர்கள் திவ்ய தம்பதிகளாக்க் குடும்பத்தில் ஸ்கலவித ஸௌபாக்யத்துடன் விளங்குவார்கள். முதல் தினம் பூஜை செய்த மஞ்சள்பொடியை மறுதினம் ஸ்நான காலத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.


— தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).