சாக்தம் அம்பாள் வழிபாடு

 நமது பாரம்பரியம் சாக்தம் என்பது

அம்பாள் வழிபாடேயாகும்.


சாக்தம் என்பது ஒவ்வொரு பெண் வடிவம் உயிருள்ள பெண் தெய்வம். 


இந்தியாவில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக #கன்யா பூஜை அல்லது #சுகாஸினி பூஜை என்று வணங்கி வழிபடு கின்றனர்.


ஆதிசங்கரருக்கு முன்னால் 

காளி வழிபாடு வெகுவாக நரர்களை, மிருகங்களை பலியிடுதல் என இருந்துவந்தது. 


காளி மிகவும் உக்ரமானவள் என நம்பப்பட்டது. 


ஆதி சங்கரர் தேவியினை அன்புள்ளவளாக விளக்கி 

ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையினை வகுத்துக் கொடுத்தார். 


தற்சமயம் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.


தாய் உலகம் அனைத்திற்கும் அன்னை என்பதில் இருகருத்துக்கு சிறிதேனும் இடமில்லை. 


தேவி பாகவதம் தேவிதான் முழுமையான பராசக்தி என்கிறது.


தேவி அவள்


பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்தார். 


தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 


சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார். 


இந்த மூவரையும் மூன்று கடவுளர்கட்கும் அவரவர் படைப்பு முதலான தொழிலினை செம்மையாய் செய்ய அனுசரணையாக இருப்பதற்கென திருமணம் செய்து வைத்தார்.


படைப்புத் தொழில் செய்பவரான


பிரம்மாவிற்கு சரஸ்வதியையும்


காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு லக்ஷ்மியையும் 


அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு பார்வதியையும் மணம் முடித்து வைத்தார்.


சிவன் பார்வதியுடன் சேர்ந்து இல்லை எனில் தன்னுடைய தொழிலை சரிவர செய்யமுடியாது என்றும்.


அவள் இல்லையெனில் சவத்தினை ஒத்தவர் எனவும் சௌந்தர்ய லஹரி கூறுகிறது. 


சக்தி மூன்று கடவுளர்கட்கும். தேவையானது இது அவர்கள் மூவருக்கும் பொருந்தும். 


இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். 


ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என நாம் சொல்லவில்லையா?


தேவிக்கு என எல்லா கோயில்களிலும் தனி சன்னதி உள்ளது. 


ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சக்தியினை அவரின் பலவித புகழ் வடிவிலே ஏதாவது ஒரு வடிவில் காண்கிறோம்.


தற்காலத்தில் தாயின் வழிபாட்டிற்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கிறது.


இன்றைய உலக கஷ்டமான நிலையில் தேவியின் வழிபாடுதான் சுகத்தையும் அமைதியையும் கொடுக்க வல்லது.


அவளே தாயுள்ளம் உள்ளவள் அதனால் தான் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தில முதல் நாமா


ஶ்ரீமாதா


அவளே லோகஜனனி


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).