அம்பிகையின்வைபோகம்பாகம்2

 #அம்பிகையின்வைபோகம்பாகம்2



அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள்.


அம்பிகையை நோக்கி செல்லும் பாதை கணித அமைப்பு கொண்டதே ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பாகும். 


சாதகன் இந்த பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் பேரறிவான, 


ஆற்றலை எவ்வாறு அடைகிறான் என்பதே அடுத்தடுத்த யோகினிகள் அமைப்பிடமும், 


அவர்களின் செயல்பாடுகளையும் சாதகன் தன்னுள் மெல்ல , மெல்ல தன்னகத்துள்ளே உணர்ந்து கொள்கிறான்.


இவ்வண்டம் கடந்த பேரறிவே தானாகிறான். உடல் வேறு , 


தான் வேறு என்ற அனுபவம் பெற்ற பின் மிஞ்சி இருப்பது ஆன்மா.


ஆன்மாவே ..அறிவுமயம். 


மனமற்ற எண்ணங்களற்ற …..ஆனந்தமயம்.


அன்னையே ! 


உன்னை நீயே…..உள்ளபடி காண்பித்து அருள்க ”


என பிராத்தித்து தினமும் இதனை பாராயணம் செய்தல் மிகவும் நன்று.


ஸ்ரீ வித்யா உபாசகர்கள் நவாவர்ண பூஜையில் கிடைக்கும் பலனை ……. 


ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரத்தின் மூலம் பெறலாம் என்பர்.


செய்ய வேண்டியதெல்லாம் இதனை தினசரி பாராயணம் செய்தலே.


பின்னர் அன்னையின் காட்சியும், குருவும் தாமே வந்து அடுத்த படிக்கு அழைத்துச் செல்வார்கள்.


இதனை பாராயணம் செய்யுமிடத்தில்


 ஏழ்மை , 


துன்பம் , 


நோய்கள் , 


மனக்குழப்பங்கள் , 


எல்லா வித துயரங்களும் அகன்று விடும். 


சகல தேவதைகளுடன் கூடி அன்னை லலிதாம்பிகை அங்கு வாசம் செய்வாள். 


ஆனந்தம் பொங்கும் செயல்கள் நித்தியமாய் அங்கு நிகழும்.


சக்தி விளங்கும் அருள்வாக்கும் 

மகா

சாந்தி விளங்கும் அருள் நோக்கும்

பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய் …


ஆதி தேவியே அம்மா

எனை ஆள வா வா அம்மா. 


என பக்தியுடன் பாடி துதிப்போம்.


வாசம் செய்வாள். 


ஆனந்தம் பொங்கும் செயல்கள் நித்தியமாய் அங்கு நிகழும்.


சக்தி விளங்கும் அருள்வாக்கும் மகா

சாந்தி விளங்கும் அருள் நோக்கும்

பக்திபுரியும் அருள் வாழ்க்கையும் தருவாய் …


ஆதி தேவியே அம்மா

எனை ஆள வா வா அம்மா.


என பக்தியுடன் பாடி துதிப்போம்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).