சக்ரராஜம் தொடர்ச்சி 2
#சக்ரராஜம்
என்று போற்றபடும் ஶ்ரீசக்ரத்தின் அமைப்பு.
4. ஸ்ரீ சக்ரத்தில், #அந்தர்த்தசாரம்' என்ற உள்பத்து கோணம்
#ஸர்வரக்ஷாகரசக்கரம் என்ற பெயர் பெற்றுத் திகழ்கிறது.
இது ஆறாவது ஆவரணமாக அமைந்துள்ளது.
இங்கு #நிகர்ப்பயோகினிகளும்'
அவர்களின் நாயகியாக,
#திரிபுராமாலினியும்'
வீற்றிருந்து அருளுகிறார்கள். இதுவும் சக்தி மூலமாகக் கருதப் படுகிறது.
நம் உடலில்,
இரு புருவங்களின் மத்தியில் உள்ள பகுதி, உள்பத்து கோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.
ஆதாரச் சக்கரங்களில்,
அநாஹதம் ஸ்ரீசக்ரத்தின் உள்பத்து கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
5. ஸ்ரீசக்ரத்தில்,
ஐந்தாவது ஆவரணமான, வெளிப்பத்து முக்கோணங்கள் #பஹிர்த்தசாரம்#என அழைக்கப்படுகின்றன.
இதில் வாசம் செய்யும்
#குலோத்தீர்ணயோகினிகளுக்கு' #திரிபுராஸ்ரீ'
என்ற
திருநாமமுடைய தேவி தலைவியாக இருக்கிறாள்.
இந்த அம்பிகை,
தங்கமயமான சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருளுகிறாள்.
இந்த சக்கரம், சத்குருவை அடையும் மார்க்கத்தைக் காட்டுவதாகவும்,
குரு சிஷ்யப் பரம்பரையின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.
சத்குரு ஒருவரே,
பரப்பிரம்ம ஸ்வரூபியாகிய தேவியை அடையும் மார்க்கத்தைக் காட்ட வல்லவர்.
ஆகவே,
குருவை அடைதல்,
ஞான மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
#குலோத்தீர்ணயோகினிகளை,
குலம்,
உத்தீர்ணம்,
யோகினிகள்
என்று பதம் பிரிக்கலாம்.
இதில் குலம் என்பது,
ஞான மார்க்கத்திற்குத் தேவையான குரு சிஷ்யப் பரம்பரையே.
உத்தீர்ணம் என்பது
நல்ல முறையில் விருத்தி செய்வது.
யோகினிகளை தேவிகள் எனக் கொள்ளலாம்.
ஆக,
குரு சிஷ்யப் பரம்பரையின் விருத்திக்கு அருளுவதால்
இந்த தேவிகளுக்கு இத்தகைய திருநாமம் ஏற்பட்டது எனக் கொள்ளலாம்.
சிஷ்யனுக்கு எப்படி குரு முக்கியமோ அப்படியே,
குருவுக்கும் நல்ல சிஷ்யர்கள் அவசியம்.
இந்த ஐந்தாவது ஆவரண பூஜை, அப்படிப்பட்ட சத்சிஷ்யர்களை குருவிடம் சேர்ப்பிப்பதோடு,
குரு சிஷ்ய இணக்கத்திற்கும் காரணமாக அமைகிறது.
இதுவும் சக்தி மூலமாகக் கருதப்படுகிறது.
மனித உடலில்,
கழுத்துப் பகுதி, வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது.
யோக நெறியில், மணிபூரகச் சக்கரம்.
ஸ்ரீசக்ரத்தின் வெளிப்பத்து முக்கோணங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
6. ஸ்ரீசக்ரத்தில் நான்காவது ஆவரணமாகிய
சதுர்தச கோணம்
(14 முக்கோணங்கள்),
சக்தி சக்கரமாகும்.
இந்த பதினான்கு முக்கோணங்களும் பூபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவே சாதகன்,
ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தை உணரும் ஆரம்ப நிலை.
சதுர்தச கோணம்,
ஈரேழு பதினான்கு உலகங்களையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது.
மாயையை அகற்றி
ஆத்ம ஞானத்தை அருளுவதால் #ஸர்வசௌபாக்கியதாயகசக்கரம்' என்றும் அறியப்படும்
இதில், #ஸம்ப்ரதாயயோகினிகள்' என்னும்
பதினான்கு சக்திகள் வசிக்கிறார்கள்.
இவர்களின் நாயகி,
#த்ரிபுரவாஸிநீதேவி.
#தக்ஷிணாமூர்த்தி
என்ற திருநாமமுடைய பரமேஸ்வரனே ஆதிகுருவாக அறியப்படுகிறார்.
அவர் தாமாகவோ அல்லது குருவடிவாகவோ தோன்றி,
ஜீவன் ப்ரஹ்மம் இரண்டும் ஒன்றே என்ற பேதம் இல்லாத நிலையை அருளுவதே 'ஸம்ப்ரதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே,
இந்த சக்கரத்தில் வசிக்கும் சக்திகளுக்கு 'ஸம்ப்ரதாய யோகினிகள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. நம் உடலில் இதயப் பகுதி, சதுர்தச கோணத்தைக் குறிப்பதாக அறியப்படுகிறது.
யோக நெறியில் சுவாதிஷ்டானச் சக்கரம்,
(ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு.2)
ஸ்ரீ சக்ரத்தின் சதுர்தச கோணத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!

Comments
Post a Comment