சக்ரராஜம்என்றுபோற்றபடும்ஶ்ரீசக்ரத்தின்அமைப்பு தொடர்ச்சி3
#சக்ரராஜம்என்றுபோற்றபடும்ஶ்ரீசக்ரத்தின்அமைப்பு
.
தொடர்ச்சி-3
#7ஸ்ரீசக்ரத்தின்
மூன்றாவது ஆவரணமாகிய
எட்டிதழ் கமலம்,
அஷ்டதளபத்மம் எனப்படுகிறது.
இது சிவமூலமாக அறியப்படுகிறது. '#ஸர்வஸம்க்ஷோபணசக்ரம்'
என்றும் அறியப்படும்
இதில், #குப்ததரயோகினிகளான' எட்டு சக்திகள் வாசம் செய்கின்றனர். இவர்களின் நாயகி, '
#த்ரிபுரஸூந்தரி'
என்ற திருநாமமுடைய தேவி.
இந்த யோகினிகள் மிகவும் கண்டிப்பானவர்கள்.
இந்த தேவதைகளின் கட்டுப்பாட்டிலேயே,
ப்ரகிருதி,
மஹத் தத்வம்,
அகங்காரம்,
பஞ்ச தன்மாத்திரைகள்,
பஞ்ச பூதங்கள்,
கர்ம,ஞானேந்திரியங்கள்,
அந்தகரணம்,
புருஷன்(ஆத்மா)
ஆகிய யாவும் இருக்கின்றன.
இந்த யோகினிகளைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பின்னொரு பதிவில் பார்க்கலாம்.
நம் உடலில், தொப்புள்,
ஸ்ரீசக்ரத்தின் எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது. ஆதாரச் சக்கரங்களில் மூலாதாரம்,
ஸ்ரீசக்ரத்தின் எட்டிதழ் கமலத்தைக் குறிக்கிறது.
#8ஸ்ரீசக்ரத்தின்,
இரண்டாவது ஆவரணமாகிய
#பதினாறிதழ்கமலம்,
#ஸர்வாசாபரிபூரகச்சக்கரம்
என்ற திருநாமத்துடன் விளங்குகிறது.
இதில், '#குப்தயோகினிகள்' என்ற திருநாமத்துடன் உள்ள பதினாறு சக்திகள் வசிக்கிறார்கள்.
சாதகன்,
இந்த ஜென்மத்தில் அனுபவித்தது போக
மீதியுள்ள கர்மா நல்ல முறையிலான கர்மாவாக அமைய,
இவர்கள் அருள்பாலிக் கிறார்கள்.
இவர்களின் நாயகி,
#திரிபுரேசி' தேவியாவாள்.
இது சிவ சக்கரமாகும்.
நம் உடலில்,
இடுப்பு மற்றும் தொடைகள், ஷோடசதள பத்மமாக அறியப்படுகின்றன.
யோக நெறியில்,
மூலாதாரத்திற்கும்,
பின் தொடைக்கும் இடைப்பட்ட பகுதி,
ஷோடச தள பத்மமாகும்.
#9ஸ்ரீசக்ரத்தின்
முதல் ஆவரணமாகிய
மூன்று சதுரங்கள் கொண்ட
பூபுரம்,
#த்ரைலோக்கியமோகனச் சக்கரம்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறது.
இதில் வாசம் செய்யும்,
அஷ்டமா சித்திகள்,
ப்ராஹ்மீ,
மாஹேஸ்வரி,
கௌமாரி,
வைஷ்ணவீ,
வாராஹீ,
மாஹேந்த்ரீ,
சாமுண்டா,
மஹாலக்ஷ்மீ
ஆகிய அஷ்ட மாத்ருகா தேவிகள்,
ப்ரகட யோகினிகள்
(பத்து முத்ரா சக்திகள்) முதலானோருக்கு
#த்ரிபுரா
என்ற திருநாமமுடைய தேவியே சக்ரேஸ்வரியாக விளங்குகிறாள். இது #சிவசக்கரமாகும்
நம் உடலில்,
பாதங்கள்,
ஸ்ரீ சக்ரத்தின் பூபுரமாக அறியப்படுகிறது.
யோக நெறியில்,
மூலாதாரத்தின் கீழ் உள்ள பகுதி, பூபுரமாக அறியப்படுகிறது.
பின்னொரு பதிவில்,
நம் மனதில் செயல்பாடுகளுக்கும், ஸ்ரீசக்ரத்திற்கும் இருக்கும் தொடர்பினை விரிவாகக் காணலாம்.
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!

Comments
Post a Comment