தேவிகட்கமலா மற்றும் 98யோகினிகள்


 #தேவிகட்கமலா என்பது நம்மை #காக்கும்அரண்.


அது எவ்வாறு ?


ஒவ்வொரு ஆவரணத்திலும் யோகினிகள். 


அதே மாதிரி 98யோகினிகள் .


அவர்களின் #திருநாமபாராயணம்.


அதை செய்வதற்கு நாம்பாக்கியம் செய்து இருக்க வேண்டும்.


அது எவ்வாறு.


நாம் கோவிலின் வாசலில் குடி இருந்தாலும். 


அவளை வணங்குவதற்கு அவளின் அனுகிரஹம் வேண்டும்.


அவ்வாறே இந்த கட்கமாலா பாராயணம்.


ஓவ்வொரு ஆவரணத்திலும் உள்ள யோகினிகளைப் பற்றிய பதிவை வரும் நாட்களில் காணலாம்.


அது எவ்வாறு சாத்தியம் ஆயிற்று.


பல நாட்கள் அம்பாளின் ஶ்ரீ லலிதா சஹஸ்ர நாம பாராயணம்.


பாராயணத்தின் பலனாக தானாகவே தேவிகட்கமலா ஸ்தோத்திர புத்தகம் அம்பாளின் சந்நிதியில் வைத்து கிடைக்கப்பெற்றேன்.


அதேபோல் அம்பாளின் சந்நிதியில் ஶ்ரீமஹாமேரு கிடைத்தது.


தேவிகட்கமலா ஸ்தோத்திரம் பாராயணம் செய்துகொண்டு இருக்கும் போது .


ஶ்ரீசக்ரம் அதில் ஓவ்வொரு ஆவரணத்தில் உள்ள தேவிகள் குறித்து குறிப்பு அடங்கிய பெரிய அளவினா ஶ்ரீசக்ரம் திருப்படம்.


தற்போது தொடர்ந்து ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மற்றும் தேவிகட்கமலா பாராயணம்.


பாராயணம் செய்யும் போது யோகினிகளைப் பற்றிய விரிவான பதிவை பதியலாம் என்ற எண்ணம் எண்ணத்தில் உதித்தது. 


அதை பதிவதற்கான சிறு முயற்சி அம்பாளின் அனுகிரஹத்துடன்.


எல்லாவற்றையும் நடத்துபவள் அவள்


அதில் நாம் ஒரு கருவி என்பதே நிதர்சமான உண்மை.


#ஓம்ஶ்ரீலலிதாதேவ்யேநமஹ#

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).