தீர்க்கசுமங்கலிவரம்
#தீர்க்கசுமங்கலிவரம்
அருளும்
#காரடையான்நோன்பு..
இந்த விரதம் இருந்தால்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்*
*சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.
மாசி மாதம் 30 ஆம் தேதி பூஜை முடிந்த பின்னர் எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்*
*மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.
மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.
*மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள்.
அதாவது,
காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட,
கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்*.
*காரடையான் நோன்பு சத்தியவான் சாவித்திரி கதை*
*மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள்.
இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள்.
அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார்.
பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர்,
சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள்.*
*கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும்,
பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை.
அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான்.
அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும்,
பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.
அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால்,
அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.*
*இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.
சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார்,
மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.
எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.
எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்,
என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்*.
*காரடையான் நோன்பு விரதமுறை*
*மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.
மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
இந்த ஆண்டு விரதம் வரும் 14:03:2024ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11:00 A.M மணி முதல்
11 : 55மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்* *பகல் 12: 01 மணிக்கு சரடு கட்டிக்கொள்வது நல்ல நேரம் உத்தமம்*
*விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.*
*தீர்க்க சுமங்கலியாக வாழ சுக்கிரனின் அனுக்கிரகம் முக்கியமாகும்.
எனவே பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேர்ந்து சுக்ர ஸ்தலமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களை போக்கி தீர்க்க சுமங்கலி யோகத்தை தரும். தீர்க்க சுமங்கலி யோகம் பெற விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
காரடையான் நோன்பு விரதம் இருக்கும் திருமணம் ஆகாத பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் அமையும்*
*காரடையான் நோன்பன்று கயிறு கட்டிக் கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம்...!*
*பங்குனி முதல் நாளில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு*
*சாவித்திரி தேவியை வழிபடுவதாம் இதற்கு ‘சாவித்திரி விரதம்’ என்றும் பெயருண்டு.*
*இந்நாளில் தான் சத்தியவானை எமனின் பிடியில் இருந்து மீட்டாள் சாவித்ரி.இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம்,
கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர். இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர்*
*கணவர் அல்லது வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு.
திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும்.*
*விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர்.
அடையோடு உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர்.
குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு இதை சாப்பிட கொடுப்பது மிக அவசியம். அப்போது தான் நோன்பு முழுமை அடைவதாக ஐதீகம்*.
*இந்த விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் அம்மனுக்கு கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்ட பின், மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்ளலாம்*.
*சரடு கட்டிக் கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம்:*
*தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே!*
*ஸஹாரித்ரம் தராம்யஹம்!*
*பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!*
*ஸுப்ரீதா பவ ஸர்வதா.*
*உருக்காத வெண்ணையும் ஒரடையும் நான் தருவேன்,*
*ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய்!*
*என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்லவேண்டும்*
*🙏🌷பெண்களுக்கான பதிவு*
*14-03-2026 சனிக்கிழமை காரடையான் நோன்பு🌷🙏*
*🙏🪷காரடையான் நோன்பு - 🪷🙏*
*🙏மாசியும் பங்குனியும் சேரும் நாளன்று*
*நோன்பு சரடு கட்டிக் கொள்ள வேண்டும்.* *அதுவும் மாசி மாதம் இருக்கும் போதே சரடு கட்டிக் கொள்ள வேண்டும்.*🪷🙏
*ராம் ராம் 🙏*
*🙏🌷சனிக்கிழமை 14/03/2026
இரவு 1.03 மணியளவில் பங்குனி மாதம் பிறக்கிறது.*
*🙏நடு இரவை ஒட்டி பூஜை செய்வது உத்தமம் அல்ல.🙏*
_*🙏இரவு 9.00 மணிக்கு மேல் அம்பாளின் சாந்த சொரூபம் மாறுவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.🙏*
*🙏எனவே 14.03,26 சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிக்குள் புதன்,
சந்திர ஹோரைகளில் பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள உத்தமம்.........*
*🙏ஒரு சில பஞ்சாங்கங்களில் இரவு 9 மணி முதல் 10 மணிக்குள்ளும்
(குரு ஹோரையில்) சரடு கட்டிக் கொள்வதற்கு நல்ல நேரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.🙏*
*🙏காரடையான் நோன்பு மேலும் விபரம்:-🙏*
*🙏ஸங்கல்பம் :*
_*🙏மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துஸ்ச* *அந்யோந்ய ப்ரீதி அபிவ்ருத்யர்த்தம்* *அவியோகார்த்தம்*
*ஸ்ரீ காமாக்ஷி* *பூஜாம் கரிஷ்யே*_🤲🕉️🙏
*🤲த்யானம் :*🤲
_*🙏🕉️🤲ஸந்த்ராபீடாம் ஸதுரவதநாம்* *ஸஞ்ஜலாபாங்க லீலாம்* *குந்தஸ்மேராம் குஸபரநதாம்* *குந்தளோத்தூத ப்ருங்காம்* *மாராராதே: மதனஸிகினம்* *மாம்ஸளம் தீபயந்தீம்* *காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம்* *கல்பவல்லீ முபாஸே🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️🤲சந்திரனை சிரசில் ஆபரணமாக தரித்தவளும் அழகிய திருமுகத்தை உடையவளும் சஞ்சலமான கடாட்ச லீலையை உடையவளும் குந்தபுஷ்பம் போல் அழகை உடையவளும் ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும் முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கரு வண்டுகளை உடையவளும் மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும் கவிகளின் வாக்கிற்கு கல்பவல்லியாக இருப்பவளும் ஆன காமாட்சி தேவியை உபாசிக்கிறேன்💐🌷🌹🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🤲த்யான ஸ்லோகம் :🤲🙏*
_*🙏🕉️🤲ஏகாம்பரநாத தாயிதாம்* *காமாக்ஷீம் புவனேஸ்வரீம்* *த்யாயாமி ஹ்ருதயே தேவீம்* *வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்* *காமாக்ஷீம் ஆவாஹயாமி🤲👣🙇♂️🕉️🙏*_
*🙏🤲சரடு கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :🤲🙏*
_*🙏🕉️🤲தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச ஹரித்ரம் தாராம்யஹம்* *பர்த்துஹூ ஆயுஷ்ய* *ஸித்யர்த்தம் ஸுப்ரீத பவ ஸர்வதா🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️நைவேத்யம் செய்யும் போது ..🕉️🙏*
🙏🕉️🤲*"உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்று உனக்கு நான் தருவேன் ஒருநாளும் என் கணவர் என்னை விட்டு பிரியாது இருக்க அருள் தருவாய் அம்மா.*🤲👣🙇♂️🕉️🙏
*ராம் ராம் 🙏*
*🙏🕉️ஸர்வம் ஸ்ரீ*
*கிருஷ்ணார்ப்பணம் 🕉️🙏*
*🙏🕉️அம்பிகையின் திருவடிகளில்*
*சரணம்🕉️🙏
உங்க வீட்டு வாத்தியார் என்ன சொல்லுறாரோ அவரையும் ஒரு வார்த்தைக்கேளுங்க.
நண்பரின் பதிவு Jothidiar Namagiri,
படித்ததில் பிடித்ததை மீள் பதிவிடுகிறேன்.
என்றும் அன்புடன்
தேடுதல் என்பணி ஹரிதியாகராஜன்

Comments
Post a Comment