வசந்தநவராத்திரிசிறப்புபதிவு#
#வசந்தநவராத்திரிசிறப்புபதிவு#
எல்லாம் வல்ல அம்பிகைக்கு நான்கு விதமான நவராத்திரிகள் உள்ளது.
நான்கு விதமான நவராத்திரி
1. வசந்த நவராத்திரி - ஸ்ரீ லலிதாம்பிகைக்கு உரிய நவராத்திரி.
2. ஆஷாட நவராத்திரி- ஸ்ரீ வராகி அம்பிகைக்குரிய நவராத்திரி.
( வராஹி அம்பிகை எல்லாம் வல்ல லலிதாம்பிகையின் சேனாதிபதி ஆவார்)
3. நமக்கெல்லாம் தெரிந்த புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி- துர்க்கை லட்சுமி மற்றும் சரஸ்வதி மூன்று சக்திகளுக்கு நடத்தப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி.
4. சியாமளா நவராத்திரி- எல்லாம் வல்ல லலிதாம்பிகையின் மந்திரியாக விளங்கும் ஸ்ரீ ராஜ சியாமளா, ராஜ மாதங்கி அம்பாள் .
வசந்த நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி இந்த இரண்டு நவராத்திரி ..
முக்கியத்துவம் என்ன என்றால் ?.
அந்த காலங்களில் பூமியில் நிறைய மரணங்கள் எமதர்மனின் கோர பற்கள் மூலமாக நடைபெறும்.
இதனை தடுக்க எல்லாம் வல்ல அம்பிகையை நாம் பிரார்த்தனை செய்யும்போது அம்பாள் அசுரனை சம்ஹாரம் செய்வது போல் கெட்டதுகளை தீர்த்து வைப்பார்.
வசந்த நவராத்திரி -
ஸ்ரீ சக்ர பூஜை சிறப்பு
19.03.2026 - 27.03.2026
பங்குனி அமாவாசைக்கு பின் வரும் பிரதமை முதல் நவமி வரை கொண்டாடப்படும் இந்த நவராத்திரி,
இது தேவி லலிதா திரிபுரசுந்தரியின் சக்தி மிக அதிகமாக வெளிப்படும் காலம் என்று ஸ்ரீ வித்யா மரபில் கூறப்படுகிறது.
வசந்தம் வந்தால் இயற்கை புதுப்பிக்கும்;
வசந்த நவராத்திரி வந்தால் நம் உள்ளம் புதுப்பிக்கும்.
ஆன்மீக ரீதியாக, வசந்த நவராத்திரி மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தவும், ஆன்மாவை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இந்த நாட்களில் விரதம் இருப்பது, மந்திரங்கள் ஜெபிப்பது, தேவி ஸ்தோத்திரங்களை பாடுவது ஆகியவை மன அமைதியை அளிக்கும்.
வசந்த நவராத்திரியின் கடைசி நாளில் ராமரின் பிறந்த நாளான ராம நவமி அனுசரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, வசந்த நவராத்திரியின் கடைசி நாளை
ராம நவராத்திரி என்றும் அழைக்கிறார்கள்.
இந்த நவராத்திரி, லலிதா திரிபுர சுந்தரியின் சக்தி மிக உயர்ந்து வெளிப்படும் காலம்.
#வசந்தகாலசமராத்யா”
லலிதா சகஸ்ரநாமத்தின் 612-வது நாமம் இதன் பொருள் மற்றும் விளக்கம்
இதோ: "வசந்த காலத்தில் விசேஷமாக வழிபடப்படுபவள்"
என்று இதற்குப் பொருள்.
வசந்த காலம்:
இது பருவங்களின் அரசன் (இலையுதிர் காலம் முடிந்து செடி, கொடிகள் பூத்துக் குலுங்கும் காலம்).
சமராத்யா: 'ஸம்' + 'ஆராத்யா' - அதாவது மிகச் சிறந்த முறையில் வழிபடப்படுபவள்.
ஸ்ரீ சக்கர பூஜையின் முக்கியத்துவம்இந்த நவராத்திரியில் ஸ்ரீசக்ர வழிபாடு
சிறப்பானது:
மகிழ்ச்சியின் காலம்:
வசந்த காலம் என்பது இயற்கையே பூத்து குலுங்கும் நேரம். தேவி மிகுந்த மனமகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நேரத்தில் 'ஸ்ரீ வித்யா' வழிபாடும், ஸ்ரீ சக்ர பூஜையும் விரைவான பலன்களைத் தரும்.
லலிதாம்பிகையின் ஆதிக்கம்:
சாரதா நவராத்திரி வீரத்தையும் (துர்க்கை), செல்வத்தையும் (லட்சுமி) வலியுறுத்தும். ஆனால் வசந்த நவராத்திரி முழுமையாக ஞானத்தையும் ஆனந்தத்தையும் (லலிதா & சரஸ்வதி) குறிக்கிறது.
ஸ்ரீ சக்ரம் என்பது இந்த ஞானத்தின் வடிவம்.
காமேஸ்வர - காமேஸ்வரி ஐக்கியம்: சிவனும் சக்தியும் இணைந்து உலகை படைக்கும் வசந்த காலத்தில், அவர்களின் திருவுருவமான
ஸ்ரீ சக்ரத்தை பூஜிப்பது குடும்ப ஒற்றுமைக்கும், மோட்சத்திற்கும் வழிவகுக்கும். வசந்தகால சமராத்யா” என்று தேவியை வசந்தத்தில் வழிபட வேண்டும் என்று நாமம் கூறுகிறது.
அதனால் இந்த நவராத்திரி லலிதா உபாஸகர்களுக்கு மிக உயர்ந்தது
ஸ்ரீ சக்கரம் என்பது தேவியின் நவாவர்ண சக்தியின் நேரடி வடிவம்.இந்த காலத்தில் செய்யப்படும் பூஜை:
மன அமைதி, குடும்ப சாந்தி, தொழில் வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம் எல்லாவற்றையும் வேகமாக அளிக்கும்.
வழிபாட்டு முறைகள்தினசரி பாராயணம்
லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, தேவி கட்கமாலா மற்றும் லலிதா நவரத்தின மாலை
ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்தவைமகாவிஷ்ணுவின் ஞான வடிவமான ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்தியர் மாமுனிவருக்கு உபதேசித்த மூன்று மிக முக்கியமான துதிகள் இவை:
1. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்
(1000 நாமங்கள்):
தேவியின் முழுமையான வடிவம், லீலைகள் மற்றும் பெருமைகளை விளக்கும் 1000 திருநாமங்கள்.
2. ஸ்ரீ லலிதா திரிசதி (300 நாமங்கள்): பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் 15 எழுத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு, மிக ரகசியமான முறையில் அமைக்கப்பட்ட 300 திருநாமங்கள்.
3. ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்:
ஸ்ரீ சக்ரத்தின் ஒன்பது ஆவரணங்களில் (நிலைகளில்) உறையும் அனைத்து தேவதைகளையும் வரிசையாக அழைத்து வழிபடும் மந்திர ரூபமான துதி.
2. அர்ச்சனை:
ஸ்ரீ சக்கரத்திற்கு குங்குமம் அல்லது செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தல்.
தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார்.
தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள்.
ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான்.
ரதி தேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர்.
ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது.
ராமர் பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார்.
தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள்.
பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள்.
மேற்குப் புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப் பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது.ஸ்ரீராமர் தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில்தான் முதன் முதலாக வசந்த நவராத்திரியை தொடங்கி பூஜிக்கவும் செய்தார்.
தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை,
அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.
மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.
ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும்.
ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள்.
மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
குளிர்கால
(புரட்டாசி மாதம்) ஆரம்பமும்
கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின்
இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது.
அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று,
நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.
புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம்.
பங்குனி மாதம், கோடையின் துவக்கம்.
இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.வீட்டிலேயே வழிபடுவது எப்படி?
லலிதாவை வணங்கினால் எல்லோரையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
அதனால்தான் ஸ்ரீ வித்யை போன்ற மந்திரமோ,
ஸ்ரீ லலிதை போன்ற தெய்வமோ,
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.
அன்னை லலிதாம்பிகையின் அல்லது ஏதேனும் ஒரு அம்பிகையின் படம் இருந்தால் அதற்கு பூஜை செய்யலாம். அல்லது ஒரு கும்பம் வைத்து அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடலாம்.
தினமும் குளித்து முடித்து பூஜை அறையைத் தூய்மை செய்து அம்பிகையின் படத்துக்கு பூ சாத்தி லலிதா சகஸ்ரநாமம் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு ருதுக்காலத்துக்கும் தனித்துவமான மலர்கள் உண்டு. மல்லிகை, முல்லை ஆகியவையே வசந்த ருதுக் காலத்துக்கான மலர்கள்.
முடிந்தால் இந்த மலர்களால் அலங்கரித்து அர்ச்சனையும் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமம் படிக்கும்போது ஒவ்வொரு நாமத்துக்கும் குங்குமம் கொண்டு அன்னையை அர்ச்சிப்பது சிறப்பானதாகும்.
பாராயணத்துக்குப் பின் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்தக் காலத்துக்கான பழம் பலாப்பழம் மற்றும் மாம்பழம்.
இவை கிடைத்தால் விசேஷம். இல்லையென்றால் கிடைக்கும் ஏதேனும் ஒரு பழத்தை நிவேதனம் செய்யலாம்.
அன்னைக்கு உகந்தது பாயசம். பருப்புப் பாயசம் செய்து நிவேதனம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.
நீர் மோர், பானகம் ஆகியனவும் நிவேதனம் செய்யலாம். வீட்டில் வழிபாடுகள் செய்வதுடன் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம்.
அங்கே அனுதினமும் அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும்;
இதனால், சர்வ ரோகங்களும் நீங்கும், சகல சம்பத்துகளும்
அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்.உத்தியோக - வியாபார அபிவிருத்தி தரும் லலிதா சகஸ்ரநாமம்!
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருளும் அளவிட முடியாத சக்தியும் கொண்டவை. அற்புதமான இந்தத் துதிப்பாடல்,
ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம்.
இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுவோருக்கு இகபர சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்; சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் உண்டாகும். குறிப்பாக குழந்தைப் பேறு, திருமண வரம், தோஷ நிவர்த்தி, உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஶ்ரீலலிதா பதவி உயர்வும் அரசியல் எதிர்காலமும் வழங்கக் கூடியவள்.
நிதி அதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மை களை அளிக்கக் கூடியவள். மனமொன்றி இவள் திருநாமங்களை தினந்தோறும் சொல்லி வாருங்கள்; சகல நன்மைகளும் பெறுங்கள்
நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கல்ய பயன். எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி
வாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகை யை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்...
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ.
நமது ஆலயத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ ஜெயந்திஸ்வரர் சன்னிதானத்தில் சக்கரவர்த்தினியாக அருள் புரியும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அம்பிகைக்கு வசந்த நவராத்திரி முன்னிட்டு வருகின்ற
19.3.2026 முதல் 28.3.2026 வரை பத்து நாட்கள் எல்லாம் வல்ல அம்பிகைக்கு தினமும் காலை 8.30 மணி அளவில்
சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சிறப்பு அலங்காரமும் லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையும் சோடச உபச்சார பூஜையும் நடைபெற உள்ளது.
மேலும் தினமும் மாலை 6:00 மணி அளவில் சிறப்பு கச்சேரிகள் நடைபெறும்
எல்லோரும் பூஜையில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல லலிதா அம்பிகையின் பரிபூரணம் அனுகிரக கிடைக்க பிரார்த்திப்போம்.
ஶ்ரீலலிதா திரிபுசுந்தரி/
இராமவர கோயில்
விலாசம்
#ShriLalithaMahaThripuriSundariTemple
#Ramavaram
Contact No.
+91 98419 53438
1st Main Rd,
Kurinji Nagar,
Ramapuram,
Chennai,
Tamil Nadu
600089
#NearAmbedkarstatue
#KovilGoogleMap
https://share.google/sFXYGSDQ6Cq2AebH0
வசந்த நவராத்திரி அலங்காரங்கள்
#முதல்நாள்*
ஸ்ரீ மஹா பெரியவா காஞ்சி காமாட்சி அம்பிகையை பூஜை செய்யும் அலங்காரம்
#இரண்டாம் நாள்*
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அலங்காரம்
#மூன்றாம் நாள்*
ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம்
#நான்காம் நாள்*
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
மடியில் மகா கணபதி அமர்ந்த கோலம்
#ஐந்தாம் நாள்*
ஸ்ரீ மைசூர் சாமுண்டீஸ்வரி அலங்காரம்
#ஆறாம் நாள்*
ஸ்ரீ ராஜ மீனாட்சி
#ஏழாம் நாள்*
ஸ்ரீ கஜலக்ஷ்மி
#எட்டாம் நாள்*
ஸ்ரீ ராஜ ஷியாமளா
#ஒன்பதாம் நாள்*
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
#பத்தாம் நாள்*
ஸ்ரீ அன்னபூரணி
#பன்னிரெண்டாம் நாள்
விடையாற்றி*
புஷ்ப அங்கி* பூப்பந்தல்
நவராத்திரி பூஜைகள் கலந்து கொண்டு அம்பியின் அருள்
பெற பிரார்த்திப்போம்

Comments
Post a Comment