தேவிகட்கமாலாஸ்தோத்திரம்ஒருஅறிமுகம்
#தேவிகட்கமாலாஸ்தோத்திரம்ஒருஅறிமுகம்
.
#கட்கமாலா,
ஶ்ரீசக்கர பூரண மஹாமேருவில் அமர்ந்து அருள்பாலிக்கும் தேவியின் திவ்ய நாமாக்கள் அடங்கிய பிராத்தனைக்கு உரிய ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும்.
#கட்க என்றால் #வாள் எனறும்.
#மாலா என்றால் #மாலை என்றும் பொருள்.
அதாவது இந்த ஸ்துதியை ஸ்துதிப்பவர்களின்
கழுத்தில் அணிந்த மாலை போன்று கவசமாக இருந்து ,அவர்களை அன்னை காப்பாள் என்று பொருள்.
கட்கமாலா மனனம் செய்பவ -பகர்ளுக்கு ஶ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு நிலைகளின் பொருளையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தி,
வெளிப்புறச் சுற்றில் தொடங்கி நடுப்புள்ளி வரை அழைத்து செல்வதுடன் அவர்களின் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.
ஶ்ரீசக்கரத்தின் மையத்திற்கு ,
98 யோகினிகள் அல்லது தேவியின் அம்சங்களை வணங்கிச் செல்லும்போது தன்னிடமுள்ள பற்றுகளை ஓவ்வொன்றாக களைந்து இறுதியில் அன்னையின் நினைவிலேயே நிலைக்கச் செய்ய உதவுகிறது.
அவ்வாறு ஒவ்வொரு நிலையையும் பற்றிய ஸ்தோத்திரத்தின் பகுதியை உச்சரிக்கும் போது,
அந்த நிலைக்குரிய தேவதைகள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று மனதில் நிறுத்தி வழிப்பட்டு அந்தந்த தேவதைகளின் சக்திகளை நம்மைச் சுற்றி ஈர்க்க வேண்டும்.
ஒவ்வொரு சக்கரத்திலுள்ள தேவதைகள் அனைவரையும் #யோகினி என்று அழைக்கபடுவர்.
ஓவ்வொரு சக்கரத்திற்கும் லலிதாவின் ஒரு பிரதமான
அம்சம் #சக்கரேஸ்வரி உண்டு.
மொத்தம் 9யோகினிகளும் 9சக்கரஸ்வரிகளும் உள்ளனர் என்பதே தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்.

Comments
Post a Comment