ஶ்ரீசக்ரதியானம்
#ஶ்ரீசக்ரதியானம்
.
ஹரி,
ஹர
பிரம்மா
ஆகிய
மூவரின்
ஒளி,
மூன்று புள்ளிகளாலான
ஹ்ரீம் என்ற
முக்கோணத்தின்
நடுவில் காமேஸ்வரனின்
இன்ப/காம உணர்வைத் தூண்டும்
சிகப்பு,
மஞ்சள்
நீல
தீப்பிழம்புகளுடன்
ஒளிரும் ஶ்ரீதேவியை
நான் தியானிக்கிறேன்.
ஶ்ரீதேவி தனது கீரிடத்தில்
முழுநிலை
(சௌ:)
அணிந்திக்கிறாள்:
காமேஸ்வரனுடன் கூடுவதற்கான விருப்பம்
(க்லிம்)
அவளை ஆட்கொண்டுள்ளது.
அவள் தங்க இழைகளால்
ஆடையை அணிந்திருக்கிறாள்.
மேலும் பாலா போன்று மாசற்றவளாகவும்
சந்திர ஓளி போல அழகாகவும் இருக்கிறாள்.
மூன்று கண்கள் உடையவள்.
தன் நான்கு கைகளில்
புத்தகம் (அறிவு)
கயிறு அங்குசம்
மற்றும்
கடிதங்களில் மாலை
ஆகியவற்றை வைத்திருக்கிறாள்.
அவள்
அழகு,
அழகியல்,
இணக்கம்,
மகிழ்ச்சி
மற்றும்
துடிப்பு
ஆகிய அனைத்தின்
உருவமாக திகழ்பவள்.
அவள்,
இனி சொல்லிவிருக்கும்
தங்கள் மனைவிகளை வணங்கும்,
அனைத்து தெய்வங்களும் மண்டலமாக விளங்கும் ஶ்ரீசக்கரத்தில் விளங்குகிறாள்.

Comments
Post a Comment