அதில் ஆன்மீக என்பது #ஒருபாதையா?. அல்லது #உணர்வா
இது நாள்வரை ஆன்மீகத்தைப் பற்றிய நிறைய பதிவை பதிந்துள்ளேன்.
அதில் ஆன்மீக என்பது
#ஒருபாதையா?.
அல்லது
#உணர்வா
என்ற ஒரு கேள்வி.
அதற்கு எனது பதில்
#அதுஒருஉணர்வு.
காரணம் ஞானிகள் தங்கள் பகவானிடம் உணர்ந்ததை தான்,பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் வெளிபடுத்தினர்.
அந்த ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள் நாம் உணர்ந்ததான் அதன் வலிமையை நாம் உணரமுடியும்.
அது எவ்வாறு dr.சுதாசேஷையன் தனது சொற்பொழிவில்
ஒரு மொழி ,
அந்த மொழி அதன் அர்த்தம் என்பது இரு கண்கள் என்பார்.
ஏன் என்றால் மொழி தெரிந்து அதன் அர்த்தம் தெரியவில்லை என்றால், அந்த மொழி தெரிந்து எந்தொரு உபயோகமில்லை.
இதற்கு உதாரணமாக
சாக்த வழிபாட்டில் அம்பாளுக்கு மிக உயர்ந்ததாக கருதுவது
ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்.
அந்த சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்து, அதன் அர்த்தம் தெரியாமல் பாராயணம் செய்தால் அந்த உணர்வு நம்மில் சென்று அடையாது.
காரணம் அது ஒரு திருநாமாகவே நம்மைச் சென்று அடையும் .
அதன் அர்த்தம் தெரிந்தால் அந்த திருநாமத்தை நம்மால் நன்கு உணர முடியும்.
ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தில்
#பஞ்சப்ரேதஆஸானா
என்ற திருநாமம்.
#லலிதாசகஸ்ரநாமம்நாமாவளி249.
பஞ்ச பிரேத ஆஸநா –
பஞ்ச பிரேதங்களை ஆசனமாகக் கொண்டவள்.
ப்ர -இத =பிரேத.
ஓரிடத்தைவிட்டு மற்றோர் இடத்தை அடைய சென்றவர்கள்.
இவர்கள்
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன்.
பரப்ரம்மத்திலிருந்து
முறையே
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்,
மறைத்தல்,
அருளல் ஆகிய
தொழில்களை செய்ய படைக்கப்பட்டவர்கள்.
இவர்கள் தனது நிலையை விட்டுவிட்டு தேவியிடம்
மகாப் பிரளயத்திற்குப் பிறகு லயமடைய செல்வதால்
பிரேதர்கள்.
இந்த ஐந்து பேரும், தேவியின் ஆசனமாக இருக்கிறார்கள்.
சதாசிவனைத் தவிர
மற்ற நால்வரும் அன்னை அமரும் இரத்தின சிம்மாசனத்தின் #நான்குகால்கள்.
சதாசிவம் அன்னை
அமரும் #ஆசனப்பலகை.
அதாவது,
பிரம்மா – படைத்தல் தொழில்
விஷ்ணு – காத்தல் தொழில்
ருத்திரன் – அழித்தல் தொழில்
மகேஸ்வரன் – மறைத்தல் தொழில்
சதாசிவன் – அருளல் தொழில்
பரம்பொருளான ஆதிபராசக்தி
ஐந்து தொழில்களைப் புரியும் சக்தியை ஐந்து பேருக்குப்
பகிர்ந்து கொடுக்கிறாள்.
மகா பிரளயம் ஏற்பட்டதும்
இந்த ஐவரும் தம் தொழில்களிலிருந்து விடுபட்டுப் பரம்பொருளிடம் லயித்து விடுகிறார்கள்.
அந்நிலையில் சதாசிவன்
தேவி அமர்ந்துள்ள ஆசனத்தின் மேம்பலகையாக ஆகிறான்.
அந்த ஆசனத்தின் நான்கு கால்களாக மற்ற நால்வரும் ஆகிவிடுகிறார்கள்.
இவர்கள் தத்தம் நிலையை விட்டுத் தேவியிடம் லயமடையச் சென்று விடுவதால்
அவர்களைப் பிரேதங்கள் என்று லலிதா சகஸ்ர நாமம் குறிப்பிடுகிறது.
உயிர் நீங்கிய நிலையில்
அவர்கள் பிரேதம் தானே….?
பஞ்ச – பிரேத – ஆசன – ஆஸுநா – என்பது மந்திரம்.
ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருப்பவள் என்பது இதன் பொருள்.
பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
என்ற ஐவரையும் பஞ்ச பிரும்மங்கள் என்று குறிப்பிடுவது மரபு.
இவர்கள் பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டவர்கள்.
பிரம்மத்திலேயே இறுதியில் ஒடுங்குபவர்கள்.
இவர்களுக்கு மேம்பட்ட நிலையில் இருப்பது பிரம்மமான ஆதிபராசக்தி.
அவளே பராபட்டாரிகாவான
#ஸ்ரீலலிதாதிரிபுரசுந்தரி.
இந்த திருநாமத்தை வாசித்த பிறகு அதன் அர்த்தம் தெரிந்த பிறகு,
மஹாலலிதா திரிபுரசுந்தரியை தரிசிக்கும் போது
அந்த திருநாமத்தில் கூறிய அர்த்தம் நம் மனகண் முன்னே வந்து நிற்கும்.
ஆரம்பத்தில் லலிதா திரிபுரசுந்திரியை திருவருவ படத்தை வைத்து லலிதா சஹரநாம பாராயணம் செய்து வந்தேன்.
ஒரு நாள் நண்பரின் அழைப்பின் பேரில் இராமாவரத்தில் எழுந்து அருளி இருக்கும்.
#ஶ்ரீலலிதாமஹாதிரிபுரசுந்தரி அம்பாள் தரிசனம்.
கோவில் குருக்கள் அம்பாள் திரை விளக்கம் வரை,
அம்பாளைப் பற்றிய எந்த விபரமும் எனக்கு தெரியாது.
அம்பாளின் திரை விலக்கிய போது எந்த அம்பாளை திருவுருவப்படத்தை வைத்து கடந்த எட்டு வருடங்களாக பூஜை செய்து வந்தானோ.
அந்த அம்பாளின் திருவுருவ சிலையைப் கண் எதிரே கண்டபோது மனதில் அவ்வளவு சந்தோஷம்.
இணம் புரியாத ஒரு சந்தோஷம் மற்றும் அம்பாளின் சந்நிதியில் வைத்து மஹாமேருவும் கிடைக்கப் பெற்றேன்.
தற்போது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணத்துடன் மேலும் தேவி கட்கமாலா ஸ்தோத்திர பாராயணம்.
அவ்வாறு மனகண் வந்து நின்ற பொழுது.
அடுத்த தடவை அதை பாராயணம் செய்யும்போது அம்பாளின் திருவுருவம் நம் உணர்வில் உறையும்.
எனவை ஆன்மீக என்பது ஒரு உணர்வு என உணர்ந்தால் அதனுடன் நாம் லயிக்கலாம்.
இல்லையேல் அது வெறும் திருநாமமாகவே நம்மை கடந்துச் செல்லும்.
ஒவ்வொரு முறையும் திருநாமத்தை நாம் உள்வாங்க வேண்டும் என்பதற்காக தான்.
அதன் அர்த்ததை பதிவாக பதிந்து வருகிறேன்.
அவ்வாறே ஶ்ரீகட்கமாலா ஸ்தோரத்தின் தமிழ் அர்த்ததை தற்போது பதிந்து வருகிறேன்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments
Post a Comment