பிந்து ஸ்தானம்
ஶ்ரீசக்ரத்தின் கவசங்கள்.
ஶ்ரீசக்ரத்தின் அமைப்பு மற்றும் ஓவ்வொரு ஆவரணமும் ஒவ்வொரு நம்மை காக்கும் கவசம்.
#1தியானம்ஸ்லோகம்
#2ஷடங்கார்ச்சனம்
#3குருவந்தனம்
#4திதிநித்யாதேவதைகள்
#ஶ்ரீசக்கரத்தின்9ஆவரணங்கள்.
1.#திரைலோக்யமோகனசக்ரம் அல்லது #பூரம்.
வெளிபுறம் உள்ள நான்கு வாசல்களுடன் கூடிய மூன்று கோடுகள் கொண்டசதுரமும் அடுத்துள்ள மூன்று வட்டங்களும் சேர்ந்த மூலவுலங்களையும் மயக்கம் சக்கரம்.
2 .#சர்வஆசபரிபூரகசக்கரம்.
பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையால் ஆன அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் சக்கரம்.
3.#சர்வசம்க்ஷோபணசக்கரம்.
எட்டு இதழ்கள் கொண்ட தாமரையால் ஆர அனைத்து கிளர்ச்சிகளையும் அடக்கும் சக்கரம்
4.#சர்வசௌபாக்யதாகசக்கரம்.
பதினான்கு சிறிய முக்கோணங்கள் ஆன எல்லா அதிஷ்டங்களையும் தரும் சக்கரம்.
5.#சர்வஅர்த்தசாதகசக்கரம்.
பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா செல்வங்களையும் தரும் சக்கரம்.
6.#சர்வரஷாகரசக்கரம்.
பத்து சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா பாதுகாப்பகளையும் தரும் சக்கரம்.
7.#சர்வரோகஹரசக்கரம்.
எட்டு சிறிய முக்கோணங்களால் ஆன எல்லா நோய்களையும் அழிக்கும் சக்கரம்
8.#சர்வசித்திப்ரதாசக்கரம்.
ஒரு சிறிய முக்கோணத்தால் ஆன எல்லா செயல்களிலும் முன்மை தரும் சக்கரம் .
9.#சர்வஆனந்தமயசக்கரம்.
ஒரு புள்ளி அல்லது பொட்டால் ஆன பேரானந்தமய சக்கரம்.
இச்சக்கரத்தின் ஒன்பது ஆவரணங்களில் வெவ்வேறு பகுதிகளில் உறையும் தேவதைகளின் விவரங்களை எடுத்துச் சொல்வதே கடகமாலா ஸ்தோத்திரம் ஆகும்.
ஸ்ரீசக்கரத்தில் பிந்து ஸ்தானம் என்பது ஒன்பது ஆவரணங்களின் மையப்பகுதியாகும்.
இது சிவசக்தி ஒன்றிய வடிவான ஸ்ரீகாமேஸ்வரியின் இருப்பிடமாக, கோயிலின் கருவறைக்கு இணையாகக் கருதப்படுகிறது.
இது அன்னை பராசக்தியின் மூலஸ்தானமாகவும்,
ஒன்பது பிராகாரங்களைக் கடந்த உட்பகுதியாகவும் போற்றப்படுகிறது, மேலும் இது ஞானம் மற்றும் பேரானந்தத்தின் மையமாகக் கருதப்படுகிறது.
பிந்து ஸ்தானத்தின்
முக்கிய அம்சங்கள்:
#மத்தியப்புள்ளி:
ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது முக்கோணங்களும் (ஆவரணங்கள்) சந்திக்கும் மையப் புள்ளி.
#சிவசக்திஐக்கியம்:
சிவனும் சக்தியும் ஒன்றிணைந்த நிலை.
ஸ்ரீகாமேஸ்வரி: இந்த ஸ்தானத்தில் அன்னை காமேஸ்வரி தேவி அமர்ந்திருக்கிறாள்.
#கருவறை:
ஸ்ரீசக்கர வழிபாட்டில் இது கருவறைக்கு சமமான மிக புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
ஆன்மீக ரீதியாக, இது மனதின் மையப் பகுதியையும், பேரானந்த நிலையையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த அமைப்பில் தான் ஶ்ரீசக்ரத்தின் அமைப்பு அமைந்துள்ளது.
நடுவில் பிந்து ஸ்தானத்தில் அம்பாள் /அப்பன் இணைவாக
காமேஸ்வரி காமேஸ்வரானாக இணைந்து உள்ளனர்.
அவர்களின் இணைவே இந்த லோக ஸ்ருஷ்டி.

Comments
Post a Comment