ஏன்இந்தஆன்மீகபயணம்?.


 #ஏன்இந்தஆன்மீகபயணம்?.


சுயசிந்தனை


இன்றைய காலகட்டம் என்பது மிகவும் பரபரப்பானஒரு காலகட்டம்.


என்னிடம் வரும் வாடிகையாளர் உபயோகிக்கும் வார்த்தை.


ரொம்ப work press ஜாஸ்தியாக இருக்கும்/கவலையாக இருக்கிறது/ரொம்ப tension ஆக உள்ளது என்று அடிக்கடி உபயோக்கும் வார்த்தை.


இதை போக்குவதற்கு டாக்டர்கள் சொல்கிற அறிவுரை மனதை அமைதிப்படுத்துங்கள்.


அதற்கு தியானம் பழங்குங்கள் அல்லது யோக செய்யுங்கள் என கூறுவார்கள்.


காரணம் ,2018வருடம் என்பது  எனக்கு மிகவும் இக்கட்டான காலக்கட்டம் .


அந்த சமயத்தில் நான் தேர்ந்து எடுத்தது ஆன்மீகம்.


ஆன்மீகத்தில் நம்மை ஈடுபத்திய பிறகு நம்மால் ஒன்றும் இல்லை. முயற்சி செய்வது நம்முடையது கடமை அதற்கான பதில் இறைவனது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.


காரணம் மனம் பக்குவபடுவதற்கு ஆன்மீகம் மிகவும் சிறந்த ஒரு வழி என்பதை உணர வைத்தது.


ஆன்மீகத்தில் எந்த பாதையை தேர்ந்தெடுங்கலாம் என எண்ணிய போது ,மஹாபெரியவாவின் பரம சிஷ்யர் ஶ்ரீகாமாட்சி தாசன் ஸ்வாமிகளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். அவர்கள் எனக்கு அம்பாளின் மந்திர உபதேசம் செய்து வைத்தார்.


இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே வா. அதற்கான வழியை அவள் காட்டுவார் என்றார்.


நான் அவரை தரிசித்த கிட்டதட்ட மூன்று மாதங்களில் அவர் முக்தி அடைந்து விட்டார்.


என்னை நல்வழிபடுத்துவதற்காகவே இந்த பிரபஞ்சம் என்னை அவரை சந்திக்க வைத்தது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.


அவ்வாறே நான் ஜபித்து வந்தேன். அப்போது தான நாம் ஏன் ஶ்ரீ லலிதா சஹஸ்ர நாம பாராயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அவ்வாறு பாராயணம் செய்யும்போது அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்யலாம் என்ற எண்ணமும் என்னில் தோன்றியது.


அவ்வாறு ஆரம்பித்தது தான் இந்த தேடுதல்  பயணம். முதலில் ஶ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திற்கு தமிழ் அர்த்தம் எழுத  ஆரம்பித்தற்கு பிறகு சௌந்தயலஹரி அதன் பின் தற்போது அபிராமி அந்தாதி இது நாள் வரை 98பாடலுக்கு பொருளுரை எழுத செய்து என்னை இந்த ஆன்மீக பயணத்தில் உட்படுத்தினால் அம்பாள்.


தற்போது ஶ்ரீதேவிகட்கமாலாவிற்கு தமிழ் அர்த்தம் எழுதும் பணியை என்னில் தோன்ற செய்து என்னை இந்த ஆன்மீக பயணத்தில் ஈடுபடுத்தி வருகிறாள்.


அடுத்த எந்த எண்ணத்தை உருவாக்குவாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.


அவள் இட்ட கட்டளையை நான் செய்து வருகிறேன்.


இவ்வாறாக அம்பாள் என்னை ஆன்மீக பணியில் ஈடுபடுத்தி ஒவ்வொரு புது சிந்தனையை உருவாக்கி, அவளைப் பற்றிய பலவிதமான பணிகளை என்னைச் செய்ய வைக்கிறாள் என்பதே உண்மை அதை விடுத்து நான் செய்கிறேன் என்றால் அது மஹாஸ்வாமிகள் அது தலைக்கணமே அன்றி தன்னடக்கம் இல்லை.


இதுவே ஆன்மீகத்தின் மிகப்பெரிய பக்கவநிலை மற்றும் நம்மை பண்படுத்தல் ஆகும்.


இதை எத்துணைப் பேர் ஓப்பக்கொள்கிறீர்கள் என தெரியவில்லை.


"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே"


 என்பது தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி பாடலின் புகழ்பெற்ற வரிகள். 


உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ வேண்டும் என்று நினைப்பதே என் பணி, 


அதைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன் என்பது இதன் பொருளாகும்.


அதையை என்பணியாக கொண்டு இந்த ஆன்மீகப்பணியை தொடர்கிறேன்.


#என்பணிசெய்துகிடப்பதுஅல்லாமல்வேறென்றும்இல்லைபராபரமே.


என்றும் இறைபணியில்


உங்கள் அன்பன்


தில்லைஸ்தானம்

தேடுதல் என்பணி ஹரிதியாகராஜன்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).