சக்ரராஜம்
#சக்ரராஜம்
என்று போற்றபடும்
#ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு பற்றி,
தேவியின் திருவடி,
ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு பதிவில் எழுதியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, இந்தப் பதிவினைக் கொள்ளலாம்.
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு
வாய் கோபுரவாயில்
என்று பாடுகிறார் திருமூலர் பெருமான்.
நாம் வெளியே காணும் பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றையே சுட்டுகின்றன.
'அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே!" ...
என்று சட்டைமுனிவர் பெருமான் பாடுகிறார்.
இரத்தம், தோல், தசை, நரம்புகள் முதலியவற்றாலான இவ்வுடலே பிண்டம் எனப்படுகிறது.
இதில் தோல், இரத்தம், தசை நார்கள்,எலும்பு, மூளை என ஐந்தும் சக்திமூலங்கள் என்றும்,
ஜீவன், பிராணன், சுக்கில தாது, தேஜஸ் ஆகிய நான்கும் சிவமூலங்கள் என்றும் அறியப்படுகின்றன.
சிவ, சக்தி மூலங்கள் சேர்ந்த தேகமே பிண்டம்.
அண்டம் எனப்படுவது, பஞ்சபூதங்கள்
(நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்),
ஈஸ்வர தத்துவம், சதாசிவ தத்துவம், சுத்த வித்யை, மாயை ஆகிய ஒன்பதின் தொகுப்பாகும்.
இதில் பஞ்சபூதங்களும் சக்தி மூலங்கள். மற்ற நான்கும் சிவ மூலங்கள் என அறியப்படுகின்றன.
ஆக, சிவ, சக்தி கோணங்கள் (மூலங்கள்) சேர்ந்த ஸ்ரீ சக்ரம்,
இந்த அண்டத்தையும், நம் உடலையும் ஒரு சேரக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அண்ட பேரண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் சக்தியே,
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக அருளாட்சி புரியும்
#ஸ்ரீலலிதாபரமேஸ்வரி.
நம் உடலிலும் உலகிலும் வியாபித்திருக்கும் மஹாசக்தி அவளே.
ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு படைப்பிலும் அன்னையவள் அருட்காட்சியை காணும் பேறு பெற்றோரே மகான்கள்.
அம்பிகையின் திருவடிகளின் பால் திடமான பக்தி இருப்பின்,
நம் வினை எத்தகையதாக இருந்தாலும் அது அவளது அருட்புனலால் அடித்துச் செல்லப்பட்டு நிலையான ஆனந்தப் பெருவாழ்வினை நமக்கு வழங்கும்.
இந்த மாபெரும் பிரபஞ்சத் தத்துவமே ஸ்ரீசக்ரம்.
நம் உடலும் ஸ்ரீ சக்ரமும் ஒன்றே.
நம் உடலுக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் உள்ள தொடர்பினை இந்தப் பதிவில் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1. ஸ்ரீ சக்ரத்தின் மையப் புள்ளியே
#பிந்துஸ்தானம்.
இதில் அண்டமெல்லாம் படைத்து ஆட்கொண்டு அருள்செய்யும் அன்னை பராசக்தி ஆனந்த வாசம் புரிகிறாள்.
ஒன்றாய் அரும்பி பலவாய் விரியும் ஆதியும் அந்தமும் இல்லா அம்பிகை, சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அருளாட்சி செய்யும் இடமே பிந்து ஸ்தானம்.
இந்த பிந்து ஸ்தானம் சிவமூலமாக அறியப்படுகிறது.
நம் உடலில், இந்த பிந்து ஸ்தானமே பிரமரந்திரம் எனப்படும் தலை உச்சி.
நம் உடலில் அமைந்துள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களின்படி பார்க்கும் பொழுது, ஆஜ்ஞை,
ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானமாகக் கருதப்படுகிறது.
2.ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது ஆவரணமாகிய த்ரிகோணம் (முக்கோணம்)
#ஸர்வஸித்திப்ரதசக்கரம்'
என்ற பெயருடன் விளங்குவதைப் பார்த்தோம்.
இது ஸ்ரீ சக்ரத்தின் 43வதுமுக்கோணம்.
இதில் #அதிரஹஸ்யயோகினிகள்' எனத் துதிக்கப்படும்
மஹா காமேச்வரி,
மஹா வஜ்ரேஸ்வரி,
மஹா பகமாலினி என்ற திருநாமங்களுடன் கூடிய தேவிகள் வீற்றிருக்கிறார்கள்.
இவர்களின் நாயகியாக, #திரிபுராம்பா#
என்ற திருநாமத்துடன் கூடிய தேவி ரத்தின சிம்மாசனத்தில் அருளுகிறாள்.
#அதிரஹஸ்யயோகினிகள்'
மூவரும் முறையே,
இச்சாசக்தி,
ஞானசக்தி
கிரியாசக்தி,
ஸ்வரூபிணியாக விளங்குகிறார்கள்.
ஸாதகனின் நியாயமல்லாத
இச்சைகளை, (விருப்பங்களை) நீக்கி,
ஞான ஆற்றலை மேம்படுத்தி,
அம்பிகையின் அருளாற்றலைப்
பெற தகுதிப்படுத்தும் சக்திகள் இவர்கள்.
நம் உடலில்
தலை(சிரசு)
த்ரிகோணமாக உருவகிக்கப்படுகிறது.
யோக நெறியில் பார்க்கும் போது 'இந்திர யோனி'
(உள்நாக்குப் பகுதி)
த்ரிகோணம் என்று கருதப்படுகிறது.
அம்பிகை
சிவசக்தி ஸ்வரூபிணியாக இருப்பினும்,
ஸ்ரீ சக்ரத்தில், சிவகோணங்கள்,
சக்தி கோணங்கள் என இருப்பதை அறிவோம்.
இந்த த்ரிகோணம்,
சக்தி அம்சமுள்ளதாகக் கருதப்படுகிறது.
3.ஸ்ரீ சக்ரத்தின்
ஏழாவது ஆவரணமான,
எட்டுக்கோணங்களை உடைய
ஸர்வ ரோக ஹர சக்கரத்தில் வாக்தேவதைகள்,
#ரஹஸ்யயோகினிகளாக வசித்து வருகிறார்கள்.
இவர்களின் தலைவியாக,
#திரிபுரஸித்தாதேவி மஹாபீடத்தில் அருளுகிறாள்.
இந்த ரஹஸ்ய யோகினிகள்,
ஜனனம் மரணம்,
பந்தபாசங்கள்
ஆகியவற்றை அகற்றுவதற்கு காரணமாக இருக்கிறார்கள்.
ஆன்மாவின் ஞானமற்ற தன்மையே 'ரோகம்' எனக் குறிக்கப்படுகிறது.
இந்த ரோகத்தை(நோயை) நீக்கி,
#அஹம்பிரம்மாஸ்மி'
என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதால் இது '#ஸர்வரோகஹரசக்கரம்' எனப் பெயர் பெற்றது.
ரஹஸ்ய யோகினிகளிடமிருந்தே, காவியம், இசை, நாடகம் முதலியவை தோன்றுவதால் இவர்கள் 'வாக்தேவதைகள்' என அழைக்கப் படுகிறார்கள்.
'அ' முதல் 'க்ஷ' வரையிலான அக்ஷரங்களின் தோற்றத்திற்குக் காரணமானவர்கள் இவர்களே. ஆகவே இவர்கள்,
#மாத்ருகாஸ்வரூபிணிகள்' எனவும் துதிக்கபடுகிறார்கள்.
நம் உடலில்,
'நெற்றி' அஷ்ட கோணத்தைக் குறிக்கிறது.
இதுவும் சக்தி மூலமே. யோக நெறியில், ஆதாரச்சக்கரங்களின் வழி பார்க்கும் போது,
விசுத்தி, (ஆதாரச் சக்கரங்கள் பற்றிய பதிவு..ஸ்ரீசக்ரத்தின் அஷ்டகோணத்தைக் குறிப்பதாக அமைகிறது.
இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!

Comments
Post a Comment