ஶ்ரீசக்கரம் #ஒரு #புரிதல்.
#ஶ்ரீசக்கரம் #ஒரு #புரிதல்.
ஶ்ரீசக்ரம் அல்லது ஶ்ரீயந்திரம் என்பது
லலிதா (அழகியவள்/நேர்த்தியானவள் / விளையாடுபவர்)
அல்லது
திரிபுரசுந்தரி(பூர்,புவ மற்றும் ஸ்வ என்ற மூவுலங்களிலா அழகி) என்ற பெண் வடிவில் இறை சக்தியானது, இரு பரிமாண தட்டை வடிவில் ஒன்பது முக்கோணங்கள் சூழ நடுவில் ஒரு புள்ளியில் இருந்துக் கொண்டு தன் சக்தியை வெளிபடுத்திவரும் அமைப்பாக்கும்.
இதுவே முப்பரிமாண வடிவில் இருப்பினா அதற்கு #மஹாமேரு என்று பெயர். இந்த யந்திரத்தில் மேல் நோக்கியிருக்கும்படி உள்ள நான்கு இரு சமபக்க முக்கோணங்கள் ஆண் தத்துவமான சிவனையும் , கீழ் நோக்கி உள்ள ஐந்து இருசமபக்க முக்கோணங்கள் பெண் சக்தியையும் குறிக்கின்றன.
ஐந்து முக்கோணங்கள் கீழே உள்ளது போல் யந்திரத்தை வைத்து வழிப்பட்டால் பெண் சக்தியை முதன்மைப் படுத்தி வணங்குவதாக பொருள்படும்.
இதில் 9 முக்கோணங்கள் இருப்பதால் இதை நவயோனி சக்கரம் என்று அழைப்பதுண்டு. மேலும் 9முக்கோணங்கள் 10வெவ்வேறு முத்திரைகளையும் அவற்றிற்குரிய தேவதைகளையும் குறிக்கின்றன.
மேலும் இந்த ஒம்பது முக்கோணங்களும் ஒன்றொடொன்று பின்னி 43சிறிய முக்கோணங்கள் உருவாக்கின்றன.
இவை படைப்பின் குறியீடாகக் கருதப்படுகின்றன. இதில் 102 தேவதைகள் 9நிலைகளில் பிராதிக்கப்படுகிறார்கள்.
இந்த ஒன்பது இருசமபக்க முக்கோணங்களைச் சுற்றி வெளியே 8 மற்றும் 16தாமரை இதழ்கள் உள்ளன. இவை முறையே படைப்பையும் இனப்பெருக்க அத்தியாவசிய ஆற்றலையும் குறிக்கின்றன.
இவற்றைச் சுற்றி உளாள நான்கு வாயில்களுடன் கூடிய மூன்று மதில்களாலான(கோடுகளாலான) வெளி அமைப்பானது ஒரு கோவிலின் அமைப்பையொத்துள்ளது.

Comments
Post a Comment