10முத்ராதேவிகள்
முதலாவது சக்கரத்தின் உள்புற சக்கரத்தில் உறையும் சக்திகள்.
#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்.
தாமசக்குணத்தைக் குறிக்கும் உள்புற மஞ்சள் நிற சதுரத்தின் உறையும் #10முத்ராதேவிகளை
வணங்குங்கிறேன்.
சர்வ ஸம்க்ஷோபினி -எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்தெழச் செய்பவள்.
சர்வவித்ராவினி - அனைத்தையும் கரைப்பவள்.
சர்வகர்ஷினி - அனைத்தையும் கவர்பவள்.
சர்வசங்கரி - அனைத்தையும் கட்டுபடுத்துபவள்.
சர்வோன்மாதினி - அனைவரையும் பித்துப் பிடிக்கச் செய்பவளா.
சர்வமஹாங்குசே - அனைவருக்கும் பெருநதெய்வமாக இருப்பவள்.
சர்வகேசரி - விண்வெளியில் பயணிப்பவள்.
சர்வபீஜே - அனைத்துக்கும் வித்தானவள்/மூலமாக இருப்பவள்.
சர்வயோனி - படைப்பின் இருப்பிடமாக(கருப்பையாக) இருப்பவள். #கர்பரக்ஷாம்பிகை.
சர்வ த்ரிகண்டே தேவி - அனைத்தையும் மூன்றாகப் பிரிப்பவள்.
த்ரைலோக்ய மோகன சக்ர சுவாமினி - விழிப்பு,உறக்கம், கனவு ஆகிய மூவுலக சக்கரத்தின் தலைவியாக இருப்பவள்.
பிரகடயோகினி - யோகத்தில் நிபுனத்துவம் பெற்றவள்; தடைகள் இல்லாமல் தன்னை வெளிபடுத்துபவள்.
இச்சக்கரத்தின் முத்ரா தேவி சர்வசம்க்ஷோபினி (எல்லாவற்றையும் கிளறுகிறவள்/அனைவரையும் கிளர்ந்தெழச் செய்பவள்)ஆவாள்.
இந்த ஆவரணத்தில் லலிதாவின் பிரதான அம்சம்(சக்கரஸ்வரி).
திரிபுரே - விழிப்பு/கனவு/உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கட்டுப்படுத்துகிறவள்.
இச்சக்கரத்தின் தேவி மகாமகேஸ்வரி (பேரண்டத்தை கட்டுபடுத்துபவர்/சிவனின் துணைவி)ஆவாள்
இந்த சக்கரம் நம் ஆசைகள் நிறைவறுவதையும்,நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருப்பதையும் கட்டுபடுத்த உதவுகிறது.

Comments
Post a Comment