சௌந்தயலஹரி 53வது ஸ்லோகம்

 சௌந்தயலஹரி 53வது ஸ்லோகம்


.

இந்த ஸ்லோகமும் அடுத்து வருகிற இரு ஸ்லோகங்களும் அம்பாளின் நேத்ர த்ரிவர்ண அழகை விவரிக்கிறது.


இந்த பதிவு என்ன காரணம். ஶ்ரீசக்ரத்தின் முதலாவது சக்கரத்தில் மூன்று சக்கரங்கள் என பதிவிட்டு இருந்தேன். அதில் குறிப்பிட்ட வர்ணங்கள் போல் அம்பாளின் நேத்ரங்களும் த்ரி வர்ணங்கள் என ஆதிசங்கர பகவத்பாதாள் சௌந்தயலஹரி ஸ்லோகம் 53 மற்றும் 54வது ஸ்லோகங்களில் குறிப்பிடுகிறார்.


அதன் தொடர்பை விளக்கவே இந்த இரு ஸ்லோகங்களின் பொருளுரை.


#சகலகாரியங்களும்வெற்றிபெற.


தீபம் ஏற்றி நல்லது கெட்டது தெரிய பரகாச மாக தீபம் எரிந்தால் நல்லது.


பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்


விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா


விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே


புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்


ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ


முக்குணங்கள் படைத்த கண்கள்-


தேவி தோன்ற, உலகையாள


 (தமிழ்)


வரிவிழிச் 


செம்மை 


வெண்மை 


வனப்புறு கருமை மூன்றும்


எரிதெறு கற்ப காலத்து 


இறந்த முப்பொருளும் தோன்றும்


கருஎனக் குணங்கள் 


மூன்றின் காரணம் என்னப் பெற்றால்


அரு மறைப் பொருளே உன்றன் அருளலாது உலகம் உண்டோ.


பொருள்: 


பரமேசுவரனின் அன்புக்குரியவளே, நீ விளையாட்டிற்காகக் கண்களில் மையைத் தீட்டியிருக்கிறாய். 


எனவே, உன்னுடைய மூன்று கண்களும் 


சிவப்பு, வெளு ப்பு, கருப்பு


 என்னும் மூன்றும் வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன. 


இதைப் பார்த்தால், பிரளய காலத்தில் உன்னில் அடங்குகிற 


பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் தேவர்களை மறுபடியும் படைப்பதற்காக முறையே


ரஜோகுணம், 


ஸத்வகுணம், 


தமோகுணம் 


என்பவைகளை உன் கண்கள் தாங்குகின்றனவா என்று எண்ணத் ÷ தான்றுகிறது.


ஜபமுறையும் பலனும்


45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தேவியின் அருள்  கிடைக்கும். குத்து விளக்கேற்றி அதனடியில் ஜபம் செய்ய வேண்டும். சகல காரியங்களும் அனுகூலமாகும்


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).