சர்வ சம்க்ஷோபன
மூன்றாவது ஆவரணம்/சக்கரம்
மூன்றாவது ஆவரணம்(நிலை/அடைப்பு).
சர்வ சம்க்ஷோபன
(அனைத்தும் கிளர்ச்சியூட்டும்) சக்கரம் - எட்டு தாமரை இதழ் கொண்ட வட்ட வடிவமானது.
இந்த 8இதழ்களுடன் கூடிய தாமரையானது,ஆன்மீக விழிப்புணர்வின் ஆரம்ப நிலையைக் குறிப்பதுடன் நம் செயல்களைக் கட்டுபடுத்துகிறது.
இது
பேச்சு(speech)
எதையும் உள்வாங்குதல்(Grasping).
இயக்கம் (movement)
வெளியேற்றுதல்(Excreton).
மகிழ்வுருதல்(Enjoyment)
கவர்ச்சி(Attraction).
புரட்சி(Revolution)
சமநிலை(Equanimity)
ஆகிய நம் செயல்களைக் கட்டுபடுத்துக்கிறது.
இதிலுள்ள தேவிகள் மூலதெய்வமான லலிதா பரமேஸ்வரியின் சக்தி/ஆயுதங்களான சாட்டை,அங்குசம்,வில் மற்றும் 5அம்புகள்க் குறிக்கின்றன.
இதில் 8தேவிகளை வணங்குகிறேன்.
அனங்ககுசுமே -
அங்கமற்ற கண்ணுக்குத் தெரியாத ஸ்வரூபம்.
அனங்கமேகலே -
எல்லையற்றவள்
அனங்கமதனே -
எல்லையற்ற மகிழ்ச்சியுடையவள்
அனங்கமதனாதூதரே.-
எல்லையற்ற அன்புடையவள்
அனங்கரேகே -
எல்லையற்ற அளவீடு உடையவள்
அனங்கவேகினி -
எல்லையற்ற ஆற்றல் படைத்தவள்
அனங்காங்குசே -
எல்லையற்ற கட்டுப்பாடுடையவள்

Comments
Post a Comment