அண்டமேபிண்டம்
நேற்றைய பதிவில் #அண்டமேபிண்டம்
என கண்டோம்.
அது எவ்வாறு ?.
ஶ்ரீசக்ரத்தில் மொத்தம்
ஓம்பது கோணம்.
அதில் 5கோணம் கீழ் நோக்கியும்
மற்றும்
4முக்கோணம் மேல் நோக்கியும் காணப்படும்.
அதில் கீழ்நோக்கி ஐந்து முக்கோணம் காமசக்தி/யோனி சக்தியும் எனவும்
மேல்நோக்கி சக்தி
ஞானசக்தி/சிவனோடு சக்தியை குறிக்கும்.
இவைகளின் இணைவே
#சிவசக்திஐக்கிய சொரூபமாக
ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம 999திருநாமம் குறிக்கிறது.
#சிவசக்தையக்கியசொரூபிணி.
அதுவே பிந்து ஸ்தானம். ஶ்ரீசக்ரத்தின் மையப்பகுதி.
அம்பாள் நமது உடலில் குண்டலி சக்தியாக மூலதாரத்தில் பிறப்பு உறுப்பு பின்புறம் மூலாதாரத்தில் உறங்கிறாள் என ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் கூறுகிறது.
அந்த மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி மேல் எழுப்பி ஆறு சக்கரங்களை கடந்து சஹஸ்ராத்தை அடையும் போது சிவனுடன் சக்தி ஐக்கியம் ஆகிறாள் என்கிறது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்.
எப்போது சிவனுடன் சக்தி ஐக்கியம் ஆகிறாளோ அப்போது அவர்களுக்குள் ஆனந்த பெருக்கடுக்கும் என்கிறது புராணங்கள்.
இதற்கு உதாரணமாக #செங்கனூரில் அமைந்து இருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் #அம்பாளுக்கு #மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறையோ பெண்களுக்கு ஏற்படும் #மாதவிடாய் போல் ஏற்படும்.
அப்போது அம்பாள் சந்நிதியை அடைத்து.
அம்பாளுக்கு மூன்று நாட்கள் தனி அறையில் பூஜை முடிந்த மூன்றாம் நாள், அம்பாளுக்கு பம்பாநதியில் அபிஷேக அலங்காரம் முடிந்து யானையில் கோவிலை நோக்கி வரும்போது எதிரே வரும் சுவாமியை பார்த்த அவ்வளவு சந்தோஷத்தோடு ஒரு ஆட்டம் ஆடுவாள்.
இதை கேரளாவில் #திருஆராட்டு விழா என அழைப்பர்.
இது அந்த ஊர் சம்பிரதாயம்
#செங்கன்னூர்மகாதேவகோயில்
இக்கோயில் பார்வதி தேவிக்காக திருப்புத்து
#மலையாளம் :
തൃപ്പൂത്ത് ) எனப்படும் ஒரு அரிய மாதவிடாய் விழாவைக் கொண்டாடுகிறது ,
அப்போது தெய்வத்தின் ஒழுங்கற்ற #மாதவிடாய்க்காக கோயில் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.
கோயிலில் தினமும் ஐந்து பூஜைகள் செய்யப்படுகின்றன.
புராணம்
இமயமலையில் சிவபெருமானை மணந்த பிறகு ,
அவரது துணைவியான பார்வதி இங்கு வந்ததாக நம்பப்படுகிறது . பார்வதிக்கு 28 நாட்கள் #மாதவிடாய் இருந்தது.
பத்ரகாளி, சதியின் மறுபிறவியாகக் கருதப்படுகிறார் ,
அவருடைய #காமாக்யா கோயில் வடக்கே அமைந்துள்ளது.
இதே புராணத்தின் மற்றொரு மாறுபாடு,
சிவன் மற்றும் பார்வதியின் புனித திருமணத்தைக் காண முடியாத அகத்திய முனிவரை ,
அந்த ஜோடி பின்னர் சந்தித்ததாகக் கூறுகிறது. பார்வதிக்கு மாதவிடாய் இருந்ததால், முனிவருக்கு தரிசனம் கொடுக்க 28 நாட்கள் காத்திருந்தார்.
(காமக்யா கோயிலைப்பற்றி தனிபதிவாக காணலாம்.
எனவே அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டமாக யோனி மூலமாக பிறப்பெடுக்கும்.
இதில் தன்னிலை உயர்ந்தவர்கள் மஹான்கள் ஆகிறான்.
மற்றவர்கள் மனிதர்களாகவே பிறந்து மனிதர்களாகவே வளர்ந்து மரிக்கிறார்கள்.
நாம் பிண்டமான மனிதர்களாக மண்ணில் இல்லை அண்டத்தில் மஹான்களாக பகவனோடு இரண்டர கலந்து விடுகிறார்கள்.
#சிவசக்திஐக்கியசொரூபிணி

Comments
Post a Comment