ஶ்ரீசக்ரத்தின்நான்காவதுசக்கரம்

 #ஶ்ரீசக்ரத்தின்நான்காவதுசக்கரம்



#சர்வசௌபாக்கியதாயகசக்கரம்


இதில் 14முக்கோணங்கள் 

கீழ் ஏழு ,மேல் ஏழு எனப்படும் பதினான்கு புவனங்களை குறிக்கிறது.


14தேவிகள் அடியிலிருந்து வலமிருந்து இடமாக,அதாவது எதிர்கடிகார திசைகளில் ஓவ்வொரு முக்கோணத்திலும் ஓவ்வொருவராக வாசம் செய்கிறார்கள்.


இவர்களை நான் வணங்குகிறேன்.


சர்வசம்க்ஷோபினி தேவி -


அனைவரையும் கிளர்தெழச் செய்பவள்.


சர்வவித்ராவினி தேவி -


அனைத்தையும் திரவமாக்குபவள்/வெள்ளத்தில் மூழ்கடிப்பவள்.


சர்வ ஆகர்ஷினி தேவி -


அனைவரையும் கவர்பவள்.


சர்வாஹ்லாதினி தேவி -


அனைவரையும் மகிழ்ப்பவள்


சர்வசம்மோஹினி தேவி -


அனைவரையும் மயங்கச் செய்பவள்.


சர்வஸ்தம்பினி தேவி -


அனைத்து இயக்கங்களையும் தடுக்கக்கூடியவள்.


சராவஜ்ரும்பினி தேவி -


அனைத்தையும் ரசிப்பவள்/மகிழ்விப்பவள்.


சர்வவசங்கரி  தேவி -


அனைத்தையும் தம் வசம் செய்துக் கொள்பவள்.


சர்வரஞ்சனி தேவி -


அனைத்தும் ரசிப்பவள்


சர்வோன்மாதினி -


அனைவரையும் தம் வசம் செய்பவள்.


சர்வார்த்த சாதக தேவி -


அனைத்தையும் பூர்த்தி செய்பவள்.


சர்வசம்பத்திப்பூர்ணி -


அனைத்தையும் அனைத்து வகை செல்வங்களால் நிரப்புபவள்.


சர்வமந்த்ரமயி - அனைத்து மந்திரங்களுக்குள்ளும் இருப்பவள்.


சர்வதுவநாதவக்ஷயங்கரி -


அனைத்து இருமைகளையும் நீக்குபவள்.


சர்வஸௌபாக்தாயக சக்ரஸ்வாமினி


-

எல்லாவிதமான அதிர்ஷ்டஙாகளையும் தரும் சக்கரத்தின் தெய்வம்.


சம்பிரதாயயோகினி -


பராம்பயிய முறையில் யோகா பயிற்சி செய்பவள்.


இச்சக்கரத்தின் முத்ரா தேவி சர்வவசங்கரி (அனைத்தையும் கட்டுபடுத்துபவள்)ஆவாள்.


இந்த ஆவரணத்தின் லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி) : திரிபுரவாசினி -மூவுலகிலும் வசிப்பவள்.


இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீமகாமகாகுப்த (பேரணாடத்தின் பெரிய ரகசியமாக இருப்பவள்)ஆவாள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).