மாத்ருகாஅக்ஷ்ரங்கள்
நேற்றைய பதிவில் 51சக்தி பீடங்கள்.
இன்றைய பதிவு ஏன் 51சக்திபீடங்கள் அவ்வாறு இல்லாமல் அவை 50 அல்லது 52ஆக இருக்கலாமே என்பதற்கு சான்றாக இன்றும் மற்றும் நாளைய பதிவகள் இருக்கும்.
எதுவும் காரணம் இல்லாமல் நடப்பத்தில்லை எல்லாவற்றிற்க்கும் காரணம் மற்றும் காரியம் உண்டு என்பது நிதர்சனமான உண்மை.
#மாத்ருகாஅக்ஷ்ரங்கள்
(Matruka Aksharas) என்பது
சம்ஸ்கிருத மொழியின்
#அமுதல்க்ஷ வரையிலான
51 உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் குறிக்கும்.
இவை தேவியின் வாக்குகளாகவும்,
அகண்ட பாரதத்தில் உள்ள
51 சக்தி பீடங்களாகவும் போற்றப் படுகின்றன.
சிவபெருமானின் உடுக்கையில் இருந்து தோன்றிய இந்த அட்சரங்கள், மனித உடலில் ஆறு ஆக்ஞா சக்கரங்களில் உள்ள சக்தியை பிரதிபலிக்கின்றன.
மாத்ருகா அட்சரங்கள் 51
(அம் முதல் க்ஷம் வரை):
உயிரெழுத்துகள் (16):
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, _லு, _லூ, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஹ்
மெய்யெழுத்துகள் (35):
க-வர்ணம், ச-வர்ணம், ட-வர்ணம், த-வர்ணம், ப-வர்ணம்
(25 எழுத்துக்கள்)
மற்றும்
ய, ர, ல, வ, ஷ, ஸ, ஹ, ள, க்ஷ
முக்கிய தகவல்கள்:
அட்சர சுந்தரி:
அம்பிகை, மாத்ருகா வர்ண ரூபிணியாக, 51 எழுத்து வடிவில் அருளுகிறாள்.
சக்தி பீடங்கள்:
51 மாத்ருகா அட்சரங்களும் தேவியின் உடல்பகுதிகள் விழுந்த 51 சக்தி பீடங்களை குறிக்கின்றன.
மந்திர சக்தி:
இந்த அட்சரங்களை
"மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்"
என்று ஆதி சங்கரர் குறிப் பிட்டுள்ளார்.
இந்த 51 எழுத்துக்களும்,
நம் உடலில் உள்ள
ஆறு சக்கரங்களில்
(ஆதாரங்களில்) ஏற்படும் அதிர்வுகளை குறிப்பதாக
சித்தர்கள் நூல்கள் கூறுகின்றன.

Comments
Post a Comment