மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை"


 #எனக்குள்எழும்கேள்விகள்#


இங்கு பதிக்கின்ற பதிவுகள் என்னுள் எழுகின்ற கேள்வி .


அதற்கான பதிலை தேடும்போது, ஏதாவது ஒரு குறிப்பு கிடைக்கும்.


அந்த குறிப்பைப் பற்றி தேடும்போது அதற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.


அதற்கான விடையை தேடும்போது அதற்கான விடை ,


இவ்வாறாக எனது தேடுதல் பணி தொடர்கிறது. 


வாழ்க்கை என்பதே ஒரு தேடுதல் பணி தான்.


காரணம் ரமணர் போன்ற மஹான்களுக்கு #நான் #யார் என்ற தேடுதல் இருந்ததால் தான் அவர்கள் மஹான்கள் ஆனார்கள்.


உதாரணத்திற்கு 51சக்தி பீடங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


அவ்வாறு தேடுதலின் போது. 


அது 51சக்தி பீடம் அதை விட குறைவாக அல்லது கூடுதலாக இருக்க கூடாத என்ற எண்ணம்.


அதற்கான விடையை தேடும் போது நேற்றைய மற்றும் முந்த நாளைய பதிவு உருவானது.


நாம் தேட தேட அதற்கான பதிலை ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மூலமாகவே கிடைக்கிறது.


காரணம் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை திருநாமமாகவே பாராயணம் செய்தால் அது திருநாமாகவே தெரியும்.


அதே சமயம் அதன் அர்த்தம் தெரிந்து பொருள் புரிந்து பாராயணம் செய்தால் அதன் உள்ளர்ந்த அர்த்தமும் அதில் பொதிந்துள்ள பொருள் மிக ஏராளம்.


அதை பாராயணம் செய்ய செய்ய அதன் இனிமை மற்றும் அழகை நன்கு உணர முடிகிறது.


இதை அனைத்தும் அவளின் செயல்,


அவளே என்னை தேட வைக்கிறாள்.


வெள்ளியன்று நடந்த காமாக்ஷி தாசர் ஸ்வாமிகள் ஜெயந்தியில் ,


அவரைப்பற்றி உபன்யாசம்.


அதை நிகழ்த்தியவர் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தின் ஸ்வாமிகளின்


(ஸத்குரு சாந்தானந்த மஹாஸ்வாமிகள்)


சிஷ்யர் 


மதுரை ஶ்ரீஜகன்நாதன்ஜீ அவர்கள்.


அவர் எழுப்பிய ஒரு வினா 


கடவுள் என்பவன் யார்?.


அதற்கான சுலபமான பதில்.


மனிதன்+மனம்=கடவுள்


இங்கு மனம் என்பது செம்மைப்பட்டது.


செம்மை என்பது பண்பட்ட மனம்.


அது எவ்வாறு வைரம் வைரமாக இருந்தால் சிறப்பல்ல,


அதுவே பட்டை தீட்டபட்டால் அதன் விலை உயரும்.


அதைப்போல் மனமானது ஆன்மீகம்  அல்லது இறைப்பக்தி போன்ற வற்றால் பட்டை தீட்டபட்டால் அது செம்மை ஆகிறது.


#மனமானதுசெம்மையானல்மந்திரம்தேவையில்லை.


"மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை" 


என்பது அகத்தியர் அருளிய ஞானப்பாடல். 


மனம் 


ஆசைகள், 


கோபம், 


பொறாமை 


போன்ற அழுக்குகள் நீங்கி,


அமைதியாகவும் 


தூய்மையாகவும்


(செம்மையாகவும்) 


இருக்கும்போது, 


புற வழிபாடுகளோ, 


மந்திரங்களைச் செபிப்பதோ தேவையில்லை 


என்பது இதன் பொருள். 


மனம் சுத்தமாக இருந்தால், 


அதுவே இறைநிலையை அடைந்ததற்குச் சமம். 


இதன் ஆழமான அர்த்தங்கள்:


மனச் சுத்தம்: 


மனம் ஆசாபாசங்கள்


 என்னும் 


அழுக்குகள் நீங்கி, 


எண்ணமிலா நிலை


(நிர்விசார நிலை) 


அல்லது


தூய்மை அடைவதே உண்மையான செம்மை.


மந்திரத்தின் நோக்கம்: 


மந்திரம் என்பது 


மனதை ஒருமுகப்படுத்தி, செம்மைப்படுத்துவதற்கான ஒரு கருவி. மனமே செம்மையாகும் பட்சத்தில், 


கருவி (மந்திரம்) தேவையில்லை.


சித்தர்களின் வாக்கு:


மனதை வயப்படுத்துவதே உண்மையான யோக நிலை. 


மனம் செம்மையாகும் நிலையில், மந்திரம் ஜெபிக்க வேண்டாம், வாயுவை உயர்த்த வேண்டாம் 

என சித்தர்கள் கூறுகின்றனர். 


சுருக்கமாகச் சொன்னால், 


மனதை ஒழுங்குபடுத்தி, சுத்தமாக வைத்துக்கொண்டால், மந்திரங்களும், 


மற்ற வழிபாடுகளும் அவசியமற்றதாகிவிடும்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).