நீங்கள்_வெறும்_விலங்கு_தானா? #அல்லது #விஸ்வரூபமா?
நமது முந்தைய பதிவு
#அண்டத்தில்உள்ளதுபிண்டத்திலும்ம்உள்ளது.
#யார்மஹான்கள்ஆகிறார்கள்?.
#யார்மனிதனாகவேஇருக்கிறார்கள்
?.
என்ற கேள்விகான - பதிலாக
அழகான நண்பரின் பதிவு தங்களின் பார்வைக்கு.
நிறைய போடுகின்ற பதிவிற்க்கான சான்றுகள் உடனடியாக கிடைக்கின்றன.
எல்லாம் அம்பாளின் அருள் என்பது நிதர்சனமான உண்மை.
நண்பரின் அழகான பதிவு
#நீங்கள்_வெறும்_விலங்கு_தானா?
#அல்லது
#விஸ்வரூபமா?
படைப்பின் ரகசியம் தெரிந்தால்
உன் வாழ்க்கை மாறும்!
இயற்கை எனும்
பேராற்றல் இந்த உலகத்தை
நான்கு விதமான கூடாரங்களாகப் பிரித்துள்ளது:
🕊️ பறப்பன (வானம்)
🐍 ஊர்வன (பூமி)
🐟 மிதப்பன (நீர்)
🐎 நடப்பன (நிலம்)
இந்த நான்கிற்கும்
பொதுவாக இருப்பது
'சிற்றின்ப யோனி'.
தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த ஒரு சுழற்சி இது.
இதில்
'நடப்பன'
வரிசையில் நீயும் ஒரு விலங்காகவே
வாழ்கிறாய்! 🤷♂️
⚠️ ஆனால்...
உன்னிடம் ஒரு
"மாஸ்டர் கீ" (Master Key) இருக்கிறது!
மனிதப்பிறவிக்கு மட்டுமே
கொடுக்கப்பட்ட ரகசிய ஆயுதம்:
"ஐந்தாவது யோனி!" 🗝️✨
இந்த உடலுக்குள் இரண்டு வாசல்கள்
உள்ளன:
1️⃣ கீழ் நோக்கிய வாசல்:
சுவாசம் கீழ் நோக்கிப் பாய்ந்தால்,
நீ வெறும் உடலால் வாழும் சாமான்யன்.
அது தரும் இன்பம் ஒரு கணமே! 🍂
2️⃣ மேல் நோக்கிய வாசல்:
உன் சுவாசம் தலை உச்சிக்கு
(உண்ணாக்கின் பின்புறம்)
பாயத் தொடங்கினால்,
அங்கே திறப்பது
#பேரின்பம்'
எனும் இறைநிலை! 💎🕉️
🌀 மடைமாற்றம்:
இது ஒன்றும் மேஜிக் அல்ல!
சுவாசத்தை வற்புறுத்தி மேலே தள்ள
முடியாது.
அதைச் செய்ய முயன்றால் அது வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே!
💡 உண்மையான வழி என்ன?
நீ செய்ய வேண்டியது ஒன்றே
ஒன்றுதான்:
"கவனி!" 👁️
உன் சுவாசத்தை நீ உற்றுப் பார்க்கப்
பார்க்க...
சிதறிக் கிடக்கும் உன்
எண்ணங்கள் ஒரு புள்ளியில் குவியும்.
அந்த அழுத்தத்தில் உன் சுவாசம்
தானாகவே ரூட் மாறும்! ⚡
"இது பிச்சை எடுத்துப் பெறுவதல்ல...
உன் ஆன்மாவின்
விட்டகுறை தொட்டகுறை!" 🕯️
🚨 விழித்துக் கொள்!
நீ வெறும் சாப்பிட்டு,
தூங்கி,
இனத்தைப் பெருக்கி
மடிந்து போகும்
ஒரு 'நடப்பன'
உயிர் தானா?
அல்லது
உனக்குள் இருக்கும் அந்த மேல்
யோனியைத் திறந்து பிரபஞ்சத்தை
ஆளப் போகிறாயா?
#மூச்சை_கவனி... 🌬️
உனக்குள்ளும் அந்த
ஞானத் தீப்பொறி இருக்கலாம்!
பகிர்வு
ஞானத்துடன்,
#யோகி_அருண்பிரபு

Comments
Post a Comment