ஸ்ரீசக்ரவர்ணனை

 #லலிதாம்பாளின் 


#ஸ்ரீசக்ரவர்ணனையின்



#சோபனப்பாடலை


க்காண்போம்.

 

தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில்


ஏழும் தேவிக்குப் பதிநாறு ஸ்ரீபுரங்கள்


மேருகிரியிலொரு 


ஸ்ரீபுரமுண்டதை


முன்னாலே 


உமக்கு நான் சொல்லுகிறேன்


மூவராலும் ஆதிசேஷராலும் சொல்லி

முடியாது 


அம்மன்புர மஹியை

சாவதானமாகக் கேட்க வேண்டுமிதை

தன்யனே சொல்லுவேன் – 


சோபனம் சோபனம்


ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு

உயரம் நாநூறு யோஜனைகள் உண்டு


நன்றாக நூறு யோஜனை அகலங்காண்


நான்குபுறத்திலும் வாசலுண்டு


வாசல்கள் தோறும் 


கோபுரமுண்டு 


அதற்கு


வரியாக தட்டுக்கள் 


இருபத்தஞ்சு

யோஜனைக்கு ஒரு தட்டு வீதங்கணக்கு


உச்சி மகுடம் மூன்று – 


சோபனம் சோபனம்


இந்த வாசல் போலே 


நாலு வாசலுக்கும்


இது போலே கோபுரத் தட்டுமுண்டு


இந்தக் கோட்டை வாசல் கதவு  முதல்


எல்லாம் இரும்புப் பணி இதைப்போல

எந்தக் கோட்டைகளினி 


சொல்லப் போகின்றோமோ


அந்தக் கோட்டை  இதுபோல கஸ்தியா


இந்தக் கோட்டை கழிந்தபுறமுள்ளது

ஏழுயோஜனையுண்டு சோபனம் சோபனம்


ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில்

எல்லா மரங்கலும் நிறைந்திருக்கும்


தோழர்களே ஏழு யோஜனையின் விஸ்தாரம்


சொல்லப்போகிறோம் கோட்டை இடைநடுவில்


காளியுங்காளரும் சக்தியுடனே

கால சக்ராசனத்தில் இருந்து

லலிதையுடைய நாமஞ்ஜபித்து ஒன்றாங் கோட்டை

ரக்ஷிக்கிறாள் என்றும் 


சோபனம் சோபனம்


வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல்


வேலியும்கற்பக விருக்ஷமாகும்

தங்கச் செம்புக் கோட்டையில் 


வேலி ஹரிசந்தனம்


சுசியான கிரீஷ்மருது காவல்


ஈயக் கோட்டையின் வேலி சந்தன விருக்ஷங்கள்


எங்குஞ் சுற்றிக் காவல் வர்ஷருது

முன்னாலிரும்புக்கோட்டையின்


 வேலி மந்தாரை


வெளுத்த சரத்ருது காவல் –


சோபனம் சோபனம்


பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி


ஹேமந்தருது காவல் காத தூரம்


பஞ்சப்பொன்கோட்டைக்கும் மந்திரிணி 


முதலான


சக்திகள் கிருஹம் 


சிசரருது காவல்

பிக்ஷூரகத்து சித்தர்களும்


 முத்திப்பெண்குகளுங்கூடி இருக்கின்றார்கள்


பிக்ஷூரம் கழிந்தப்புரஞ்சாரணர்

பத்மராகக் கிருஹம்


 சோபனம் சோபனம்


அழகிய கந்தர்வாள் 


வைரக் கிரஹந்தன்னில்

அதற்குப்பின் 


யோகிகள் வஜ்ஜிரக்கிருஹம்

புதுநாகரத்னமும் 


வைடூர்யத்தாலும்

பின்னிந்திரக் கல்லாலுமுள்ள கிருஹம்


முத்துக்கள் சூழும்மரகதத்தால் கிருஹம்


மின்போல் வராகிக்கும் 


நாலு கிருஹம்

சுத்தமான கிருஹம் பிரம்மாவுடையது

செம்பவழத்தாலே – 


சோபனம் சோபனம்


“மாணிக்க மண்டபத்தில் விஷ்ணுவும் இருக்கின்றார்


மண்டபத்தினிடையில் 


சிவலோகம்


பிரம்ம தேவருட


சத்தியலோகமும்


பிரபலமான விஷ்ணுவின் 


உலகம்


மாயக்கோட்டை அனந்தம் வர்ணமுள்ள கோட்டை


அதற்கிடையில் சூரியனின் விமானம்


பகவான் மார்த்தாண்ட பைரவர் இருப்பு


பக்தரே கேளின்னுஞ் –


சோபனம், சோபனம்.


சந்திரபிம்பத்தில் சிங்காரமாகவே

சரியாக இருபத்தஞ்சு கோட்டையும்

சுந்தரமான கோபுரங்களும் தானுண்டு


தொகையொரு கோட்டைக்கு நான்கு வீதம்


அப்புரத் தாமரைப் புஷ்பங்களின் வனம்


ஆறு யோஜனைக்கு நிறைந்திருக்கும்

விப்ரனே அதற்குக் கிழக்காகவே யெங்கும்


சுற்றிக் கதம்பவனம் –சோபனம் சோபனம்


அதற்குக்கிழக்கிலே மும்மூர்த்திகளுக்கும்


அகங்கள் மூன்று பத்ம அடவியிலே

இதற்கு நடுவில் சிந்தாமணி ரத்தினத்தால்


ஈச்வரி லலிதா தேவியின் கிருஹம்

நாலுபுறம் வாசல் உண்டதற்குச்சியில்


ஞானரத்னத்தாலே மகுடம்

வலப்புறத்திலே மந்திரிணியின் கிருஹம்


வாராஹிக்கிடப்புறம் –


சோபனம் சோபனம்


அக்கினி முடுக்கிலே அக்கினிக்குண்டம்


அதற்கு மேலே நிற்கும் ஸ்ரீசக்கரத்தேர்

நிர்கின்றது வாயுமுடுக்கில் மந்திரிணிதேர்


நேரே ஈசான்யத்தில் வாராஹிதேர்

இந்த நடுவிலே சக்திகளின் கிருஹம்

சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றிலும்

சிந்தாமணிக்கிருஹம் சிந்தாமணிச்சுவர்

சுற்றிலும் தீபங்கள் –


சோபனம் சோபனம்


சிந்தாமணிக்கிருஹத்தின் நடுமத்தியிலே


சிந்தாமணியாலே 


ஸ்ரீபீடம்

அஷ்டகோண வடிவாகி விளங்கிய

சக்ரராஜா வென்ற பீடத்தின்மேல்

ஐம்மூன்று தட்டத்த ஸ்ரீபீடத்திற்கு

ஆயிரத்தறுநூறு முழம் வீதி

கைமுழத்திற்கிருபது முழ உயரம் தட்டு


கடலைக்குடித்தவகஸ்தியா


 –சோபனம் சோபனம்


தட்டு தோறும் இதுபோல் உயரம் வீதி

தட்டுதோறும் சக்திகள் இருக்காள்

திட்டமாய் ஸ்ரீபீடத்திற்கப்புறத்திலே

சிங்காரப்படி முப்பத்தாறு ஸ்தம்பம்

வட்டமான இந்தபீடத்தில் ஈசர் பிரம்மா

மாலவர் ருத்திரர் கட்டிலின் கால்

கட்டிற்பலகை சிவன் ஸதாசிவன் பாய்

ஈசானன் தலையணை –


சோபனம் சோபனம்.


மஞ்சத்தின் மேல் ஹம்ஸதூளிகா மெத்தையும்

வட்ட இருபுறத்தலையணையும்

மஞ்சத்தின் மேலே கிழக்கைப் பார்த்திருக்கின்றார்

மன்மத கோடி போல் காமேசரும்

நாதர் காமேசர் மடிமேல் கிழக்கைப் பார்த்து


தாய் லலிதா தேவியும் இருக்காள்

பாலா லலிதா தேவிக்கு நித்தியம்

பதினாறு வயதென்றும் –


சோபனம், சோபனம்


#ஸர்வாருணாநவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா


சிவ-காமேஸ்வராங்கஸ்தா 


சிவா ஸ்வாதீன-வல்லபா


ஸுமேரு-மத்ய –ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா


சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா 

பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!”


என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதற்கேற்ப, இங்கே அம்பிகை வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம்.


தேவியுடைய சௌபாக்யத்திற் கொப்பில்லை

நாவாலும் மனதாலும் எண்ண முடியாது 

ராஜராஜேச்வரி மஹிமை !


அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

 


நண்பரின் அருமையான பதிவு

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).