ஶ்ரீசக்ரத்தின் மேன்மை
#ஶ்ரீஶ்ரீசக்ரம்
#ஸ்ரீசக்கரம் அல்லது #ஸ்ரீசக்கரராஜம்
என்பது அண்ட சராசரங்களின் சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு புனிதமான வடிவம்.
பராசக்தியின் முழுமையான அருள், சகல செளபாக்கியங்கள் மற்றும் ஞானத்தை அருளும் மாபெரும் எந்திரமாக இது போற்றப்படுகிறது.
#ஸ்ரீசக்கரத்தின்மேன்மை
மற்றும் சிறப்புகள்:
#சர்வதேவதாசொரூபம்:
ஸ்ரீ சக்ரத்தில் பராசக்தியின் ஆற்றல் மட்டுமின்றி,
64 கோடி தேவதைகளும் உறைந்திருப்பதாக
தேவி புஜங்கம் என்னும்
ஆன்மிக நூல் கூறுகிறது.
மகா மேருவின் வடிவம்:
இந்த சக்கரம் இருபரிமாணத்தில் (நீளம், அகலம்)
'ஸ்ரீ சக்கரம்' என்றும்,
முப்பரிமாணத்தி
(உயந்திர வடிவம்)
'ஸ்ரீ மஹாமேரு' என்றும் அழைக்கப்படுகிறது.
#ஆதிசங்கரரின்ஸ்தாபனம்:
அம்பிகையின் உக்கிரமான ஆற்றலை சாந்தப்படுத்தி,
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் ஆதி சங்கரரால் பல இடங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய பதிவில் விலவாரியாக கண்டோம்
உதாரணமாக,
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதுகளில் தாடங்க வடிவில்
ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.
#துயரங்கள்நீக்கும்:
ஸ்ரீ சக்கரத்தை முறைப்படி வழிபடுபவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும். லௌகீக சுகங்களை அனுபவிப்பதோடு, மெய்ஞானத்தை உணர்ந்து முக்தியை அடைய
இது வழிகாட்டுகிறது.
முற்பிறவியில் செய்த பெரும் புண்ணியத்தின் பயனாகவே
ஸ்ரீ சக்கர வழிபாட்டை மேற்கொள்ளும் பாக்கியம் ஒருவருக்குக் கிடைக்கும்.
https://searchingismyjob.blogspot.com/2026/05/blog-post_189.html

Comments
Post a Comment