லோகஜனனி
#அம்பாளைஏன்லோகஜனனிஎன்கிறோம்
.
சங்கரபகவத்பாதாள் அம்பாளின் கண்ணை அழகை விவரிகிறப்போது கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.
விஶாலா கல்யாணீ ஸ்பு²டருசிரயோத்⁴யா குவலயை:
க்ருபாதா⁴ராதா⁴ரா கிமபி மது⁴ராபோ⁴க³வதிகா ।
அவந்தீ த்³ருஷ்டிஸ்தே ப³ஹுனக³ரவிஸ்தாரவிஜயா
த்⁴ருவம்
தத்தன்னாமவ்யவஹரணயோக்³யா விஜயதே ॥ 49 ॥
பொருள்:
தாயே!
உன்னுடைய திருஷ்டி (பார்வை)
எட்டு விதமான அழகுகளையும், குணங்களையும் கொண்டு,
அந்தந்தப் பெயர்களைக் கொண்ட நகரங்களின் தன்மையாகவும் விளங்கி,
எல்லாவற்றையும் வென்று திகழ்கிறது:
#விசாலா:
உன்னுடைய கண்கள் அகன்று (விசாலமாக) இருப்பதால் 'விசாலா' என்று அழைக்கப்படுகிறது.
#கல்யாணீ:
மங்களகரமான பார்வை.
#அயோத்யா:
நீல மலர்களைக் (குவளை) காட்டிலும் வெல்ல முடியாத பேரழகுடையது.
#தாரா:
அருளைத் தாரை தாரையாகப் பொழிவதற்கு ஆதாரமாக இருப்பது.
#மதுரா:
வர்ணிக்க முடியாத அளவிற்கு இனிமையானது.
#போகவதிகா:
இன்பத்தை அனுபவிக்கக் கூடியது.
#அவந்தீ:
உலகங்களைக் காத்து ரட்சிப்பது.
#பஹுநகரவிஸ்தாரவிஜயா:
பல நகரங்களில் வெற்றியை நிலைநாட்டுவது.
காரணம் அம்பாளின் பெயரிலேயே பல நகரங்கள் அமைந்து இருக்கிறது. அதை தவிர பல நதிகளுக்கு அம்பாளின் பெயரே உள்ளது.
அவையாவன
#கங்கா,
#யமுனை,
#நர்மதை,
#கோதாவரி,
#காவேரி,
#சரஸ்வதி
போன்ற பல பெயர்கள்.
நம் பாரத்தை
#பாரதமாதா என்று தான்
அழைக்கிறோம்.
பூமியையே
#பூமிமாதா
என்று தான் அழைக்கிறோம்.
அதை போல் இவ்வுலகை காப்பதால் லோகமாதா ஆகிறாள்.
இவ்வாறு பல விஷயங்களில் அம்பாள் உள்ளிருப்பதால்
அவள் லோகஜனனி ஆகிறாள்.
அனைத்து ஜீவராசியிலும்
அவளே வியாபித்து இருக்கிறாள்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ
அவளே ஒவ்வொரு ஜீவராசியிலும் அவள் உள்ளிருக்கிறாள்.
அதனாலே அவள் #லோகஜனனி மற்றும் #தாயாகிறாள்.

Comments
Post a Comment