சர்வரோகஹரசக்கரம்
#சர்வரோகஹரசக்கரம்
#நேற்றுபதிவிட்டவசின்யாதிதேவதைகள்
வசினி - அனைத்தையும் கவர்பவள்/தக்கவைப்பவர்
காமேஸ்வரி - காமேஸ்வரரின்(சிவன்)துணைவி/படைப்பவர்
மோதினி - ஆனந்த அறிவாய் இருப்பவள்
விமலா - தூய்மையானவர்/இன்பத்தை கட்டுபடுத்துபவர்
அருணா - உதய சூரியனின் நிறமாக இருப்பவள்/வலியை கட்டுபத்துபவர்
ஜயினி - வெற்றி பெறுபவள
சர்வேஸ்வரி - அனைவருக்கும் தெய்வம்
கௌலினி - உன்னத குலத்தில்/குடும்பத்தில் பிறந்தவள்.
சர்வரோகஹார சக்ரஸ்வாமினி -எல்லா நோய்களையும் அழிக்கும் சக்கரத்தின் தெய்வம்
ரகசிய யோகினி - ரகசியமாக அறியப்படுபவள்.
இந்த ஆவரணத்தில் லலிதாவின் பிரதான வடிவம் (சக்கரேஸ்வரி)
திரிபரசித்தே - மூவுலகங்களிலும் அமானுஷ்ய சக்திகளை சாத்தியமாக்ககூடியவள்.
இச்சக்கரத்திற்குரிய முத்ரதேவி சர்வகேசரி(விண்வெளியில் பயணிப்பவள்) ஆவாள்.
இச சக்கரத்தின் தேவி ஶ்ரீமகாகாஸ்ந்தே(பேரண்டத்தின் பெரும் ஆதரவாக இருப்பவள்) ஆவாள்.

Comments
Post a Comment